உரக் கப்பலை இலங்கைக்குள் கொண்டுவர சீனா தீவிர முயற்சி ; நிதி வழங்கக் கூடாது என்ற நீதிமன்றத்தின் இடைக்கால தடை நீடிப்பு

Published By: Digital Desk 3

06 Nov, 2021 | 06:03 PM
image

(லியோ நிரோஷ தர்ஷளன்)

மிகவும் அபாயகரமான பற்றீரியாக்களுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சீன உர கப்பலை அனுமதிக்க விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து குறித்த சீன நிறுவனத்திற்கு நிதி வழங்குவதை தடை செய்யும் வகையில் விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடித்துள்ளது. இந்த உத்தரவை கொழும்பு வணிக மேல் நீதிமன்றின் நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ விதித்துள்ளார்.

தங்களின் சேதன பசளை மாசுபடவில்லை . ஆனால் ஆய்வக அறிக்கையை தவறாக இலங்கை  புரிந்துக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டு சீனா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

திறந்த ஏலத்தில், சீனாவின் கியுங்டாவோ சீ வின் நிறுவனம் 99,000 மெட்ரிக் டொன் உரத்தை இலங்கைக்கு வழங்குவதற்கான உரிமையை வென்றது.

ஆனால்  அந்த உரத்தில் ஆபத்தான பாக்டீரியாக்கள் இருந்தமை ஆய்வக பரிசோதனையில் நிரூபனமான நிலையில் இலங்கை நிராகரித்தது. மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட ஆய்வக  பரிசோதனையின் பிரகாரமே  இவ்வாறு நிராகிரக்கப்பட்டது.  ஆனால் சீனா அதனை ஏற்றுக்கொள்ளாது கடுமையாக விமர்சித்தது.

இவ்வாறனதொரு நிலையிலேயே வரையறுக்கப்பட்ட இலங்கை உரம் நிறுவனத்தினால் கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை வெள்ளியன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நிதி வழங்கும் தடை தொடர்ந்தும் நீடிக்கும் உத்தரவு விடுக்கப்பட்டது. 

ஒப்பந்தம் பிரகாரம் சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிக பெறுமதி கொண்ட சேதனப் பசளையை சீன நிறுவனம் அனுப்பிய போதிலும் அதில் அபாயகரமானதும் தீங்கிழைக்க கூடியதுமான நுண்ணுயிர்கள்  உள்ளதாக ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்ட விடயத்தை மனுதாரர் சார்பில் மன்றில்  சுட்டிக்காட்டிய   மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுசந்த பாலபட்டபெந்தி , இந்த நிலைமையானது ஒப்பந்தத்தை மீறும் செயல் என வாதிட்டார்.

நீதிமன்றில் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் சீன அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

மொத்த  உரத்துடன் வந்த ஹிப்போ ஸ்பிரிட் கப்பலை கொழும்புக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று துறைமுக அதிகாரசபைக்கு அறிவிக்கப்பட்டுள்ள  போதிலும் இலங்கையை அண்மித்த தெற்கு கடல் பகுதியில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சீனாவின் இந்த அத்துமீறலை ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் கடுமையாக கண்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38