(இராஜதுரை ஹஷான்)
வர்த்தமானியின் ஊடாக அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.
1970 ஆம் ஆண்டு காலக்கட்டத்தின் நிர்வாக தன்மையை தற்போது தொடர முடியாது. சுதந்திரமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அனைத்தையும் செயற்படுத்த வேண்டும் என கருதுகிறார்கள் பொதுமலசல கூடத்தை அரசாங்கத்தால் நிர்வகிக்க முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வர்த்தக நடவடிக்கைகளை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக தற்போது முன்னெடுக்க முடியாது. அரசாங்கம் சிறந்த பொறிமுறையின் ஊடாக செயற்படுகிறது. வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்பட முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
பலவந்தமான முறையில் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் சந்தையினை நிர்வகித்தால் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படும். அவ்வேளையில் தான் அத்தியாவசிய பொருட்களின் விலை நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்படும். தேவையான நேரத்தில் அரசாங்கம் சந்தை விவகாரங்களில் தலையிடும்.
அரசாங்கம் அனைத்தையும் செயற்படுத்த வேண்டும்.என பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.பொது மலசலக்கூடத்தை அரசாங்கத்தால் நிர்வகிக்க முடியாது. பேருந்தை அரசாங்கத்தால் நடத்த முடியாது.
ஆகவே அரசாங்கத்ததால் முடிந்த மற்றும் முடியாத பல விடயங்கள் உள்ளன. அரிசி,சீனி,பருப்பு ஆகியவற்றிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைக்கு கட்டுப்பாட்டு விலையை நீக்க வேண்டும். கட்டுப்பாட்டு விலை நீக்கப்படாவிடின் ஒரு கிலோகிராம் சீனியின் விலை 160 ரூபாவை கடந்து செல்லும்.
ஆகவே அரசாங்கத்ததால் முடிந்த மற்றும் முடியாத பல விடயங்கள் உள்ளன. அரிசி, சீனி, பருப்பு ஆகியவற்றிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது.
கொவிட் தாக்கத்தின் காரணமாக இறக்குமதி பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு கொள்வனவு செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வர்த்தகர்கள் விரும்புவதில்லை. வெகுவிரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM