தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்

Published By: Digital Desk 3

06 Nov, 2021 | 12:31 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடியவில்லை. இவ்வாறு தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையை விளையாட்டாகக் கருத முடியாது. 

மீண்டும் பாரியதொரு கொவிட் அலை ஏற்பட்டால் அதனை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியும் என்று என்னால் கூற முடியாது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது. அதனை விட முக்கியத்துவமுடையது தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி இடம்பெறாமையாகும். கடந்த ஓரிரு வாரங்களாக தொற்றாளர் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டது.

ஆனால் தற்போது நாளுக்கு நாள் இவ்வாறு தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இல்லை. மாறாக தொற்றாளர் எண்ணிக்கையில் கணிசமானளவு அதிகரிப்பையே அவதானிக்க முடிகிறது. எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் இறுதி தீர்மானத்தை தற்போது எடுக்க முடியாது.

எனவே தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையை விளையாட்டாகக் கருத முடியாது. மீண்டும் பாரியதொரு கொவிட் அலை ஏற்பட்டால் அதனை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியும் என்று என்னால் கூற முடியாது. இதற்கான தீர்வாக பிரதேசங்களின் அடிப்படையிலோ அல்லது தேசிய ரீதியிலோ நாட்டை முடக்க வேண்டிய நிலைமையே ஏற்படும்.

இந்த நிலைமை நாட்டில் ஏற்பட்டிருந்தமையை கடந்த காலங்களில் நாம் அனுபவித்தோம். இதே நிலைமை மீண்டும் மீண்டும் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறில்லை பாரதூரமானதொரு நிலைமை மீண்டும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இதன் ஊடாக நாடு மீண்டும் பின்நோக்கி செல்லக் கூடிய அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை என்பது தெளிவாகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை எதிர்வரும்...

2023-11-30 12:31:04
news-image

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த...

2023-11-30 12:23:54
news-image

பெண்ணின் முச்சக்கர வண்டி கொள்ளை ;...

2023-11-30 11:49:48
news-image

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிப் பிரயோக...

2023-11-30 11:48:43
news-image

ராகம வைத்தியசாலையின் புற்றுநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு ...

2023-11-30 11:45:52
news-image

சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடித்த...

2023-11-30 12:10:39
news-image

இவ் வருடத்தில் 21 ஆயிரம் மில்லியன் ...

2023-11-30 11:42:48
news-image

கொள்ளுப்பிட்டியில் சுற்றிவளைக்கப்பட்ட போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

2023-11-30 12:15:34
news-image

மருந்து மோசடியில் ஈடுபட்ட அமைச்சர் உள்ளே!...

2023-11-30 11:52:44
news-image

கோழி கிணற்றில் வீழ்ந்ததால் மோதல் ;...

2023-11-30 12:03:34
news-image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துபாய்க்கு பயணமானார்

2023-11-30 12:16:07
news-image

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டார் இலங்கைக்கான இந்தியா...

2023-11-30 11:57:48