அளுத்கம – வெலிபன்ன பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

குறித்த ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலையிலே இந்த தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தீ தற்போதைய நிலையில் அணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில், குறித்த தீயினால் ஏற்பட்ட சேத விபரங்களும் அறிவிக்கப்படவில்லை. மேலும், மின் சாரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தீ பரவியிருப்பதாக தியணைப்பு அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர்.