மஹிந்த - கோட்டா அரசாங்கம் இலங்கை அரசியல் வரலாற்றில் குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்பட்டுள்ளது - தேசிய மக்கள் சக்தி

06 Nov, 2021 | 12:26 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

பொலிஸார் சிவில் சமூகத்தினர் மீது பொது இடங்களில் வன்மையான முறையில் தாக்குதல்கள்களை முன்னெடுக்கிறார்கள். அவ்வாறாயின் சிவில் சமூகத்தினர் பொலிஸ் நிலையங்களுக்குள் எவ்வாறான தாக்குதல்களுக்க உள்ளாகுகிறார்கள் என்பதை எண்ண தோன்றுகிறது.

சட்டஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் பொலிஸார் சட்டத்திற்கு புறம்பாக செயற்படுகிறார்கள். சட்டவாட்சி கோட்பாடு சமூகத்தில் வேறுபடுத்தப்பட்டுள்ளதால் நீதித்துறையின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்

மக்கள் விடுதலை முன்னணியில் காரியாலயத்தில் சனிக்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் கடுமையாக வெறுக்க ஆரம்பித்துள்ளார்கள். 

இலங்கை அரசியல் வரலாற்றில் ஆட்சியிலிருந்த எந்த அரசாங்கமும் இவ்வாறு குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களினால் சமூகத்தின் மத்தியில் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.

மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் போது அரசாங்கம் மக்களின் கவனத்தை திசைத்திருப்பி விட இனவாதத்தை ஒரு ஆயுதமாக பிரயோகிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

ஒரே நாடு- ஒரே சட்டம் என குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் சட்டவாட்சி கோட்பாட்டை முறைக்கேடான வகையில் செயற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்திற்கு ஆதரவாளவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மறுபுறம் அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகியது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்னும் சிறையிலுள்ளார்கள்.மறுபுறம் ஜனநாயக முறைமைக்கு அமைய கருத்துரைப்பவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

பலரது வழக்குகள் குறுகிய காலத்திற்குள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் நீதித்துறை மீது கொண்டுள்ள நம்பிக்கையை வலுவிழக்கச்செய்யும்.

மறுபுறம் பொலிஸார் சிவில் சமூகத்தினர் மீது முன்னெடு;க்கப்படும் தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.சட்ட ஒழுங்கு முறைமையில் காணப்படும் பலவீனத்தன்மை இதனூடாக வெளியிடப்படுகிறது.

பொலிஸார் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் 6 மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படாவிடின் அது இரத்து செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளமை அரசாங்கத்தின் முறையற்ற கொள்கையை வெளிப்படுத்தியுள்ளது.

அரசியல் ரீதியில் மக்கள் தோல்வியடைந்தது இனி வரும் காலங்களில் நிறைவுப் பெறும்.மக்களால் வெறுக்கப்பட்ட அரசாங்கம் மீண்டும் இனவாதத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது.

ஆகவே மக்கள் அரசியல் ரீதியில் இனிவரும் காலங்களிலாவது சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00