(நா.தனுஜா)
பேலியகொடை முதல் நீர்கொழும்பு வரையான கரையோரப்பகுதிகளை நகர அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் கொண்டுவருதல் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றத்தில் நேற்றைய தினம் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
பேலியகொடை - நீர்கொழும்பு வரையான முத்துராஜவெல வனப்பகுதிக்குச் சொந்தமான கரையோரப்பகுதிகள் நகர அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் கொண்டுவரப்படுவதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜே.சி.அலவத்துவல, முஜிபுர் ரகுமான், ஹெக்டர் அப்புஹாமி, காவிந்த ஜயவர்தன, ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றத்தில் மேற்படி மனுவைத்தாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, இதுவரையான காலமும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டுவந்த பேலியகொடை - நீர்கொழும்பு வரையான கரையோரப்பகுதி, தற்போது எதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையின்கீழ் கொண்டுவரப்படுகின்றது? என்ற வலுவான சந்தேகம் எழுந்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
நாட்டிலுள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் காணிகளையும் கையகப்படுத்திக்கொள்ளும் வகையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையின் ஓரங்கமாகவே இதுகுறித்த வர்த்தமானி அறித்தலையும் நோக்கவேண்டியிருக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் நகர அபிவிருத்தி அதிகாரசபை என்பது அபிவிருத்தியுடன் தொடர்புடைய விடயங்களுக்கு மாத்திரம் பொறுப்பான அரசகட்டமைப்பாகும் என்று குறிப்பிட்ட அவர், எனினும் இவ்விவகாரம் சுற்றாடலுடன் தொடர்புடையதாகும் என்றும் அதற்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். அவ்வாறிருக்கையில் அக்கரையோரப்பகுதிகளை எதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குக்கீழ் கொண்டுவரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது? என்று கேள்வி எழுப்பிய அவர், அதற்கெதிராகவே தாம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM