(துபாயிலிருந்து நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கான தகுதியைப் பெறுவற்கு கடும் முயற்சியில் இறங்கியுள்ள இந்தியா, இன்று நடைபெற்ற ஸ்கொட்லாந்துக்கு எதிரான குழு 2 க்கான உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் 8 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
இன்றைய வெற்றியுடன் குழு 2க்கான அணிகள் நிலையில் இந்தியா 4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
எனினும் நியூஸிலாந்துக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போட்டியின் முடிவே இந்தியாவால் அரை இறுதிக்கு முன்னேற முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும்.
இன்றைய போட்டியில் ஸ்கொட்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 86 ஓட்டங்கள் என்ற மிக இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 6.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 89 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.
கே. எல். ராகுல், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 30 பந்துகளில் 70 ஒட்டங்களைப் பகிர்ந்திருந்தனர்.
ரோஹித் ஷர்ரமா 16 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் 30 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் 19 பந்துகளில் 8 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
சூரியகுமார் யாதவ் சிக்ஸ் மூலம் வெற்றி ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து 6 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் விராத் கோஹ்லி 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸ்கொட்லாந்து 17.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஜோர்ஜ் மன்சி (24), மைக்கல் லீஸ்க் (21), கெலம் மெக்லீட் (16), மார்க் வொட் (14) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
இந்திய பந்துவீ;ச்சில் ரவிந்த்ர ஜடேஜா 4 ஓவர்களில் 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் மொஹம்மத் ஷமி ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 15 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 3.4 ஒவரி;களில் 10 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM