(எம்.நியூட்டன்)

வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஆளுநரிடம் இராணுவத் தளபதி உறுதியளித்தார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா புதன்கிழமை  யாழ்ப்பாணத்திற்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் இராணுவத் தளபதி வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை வியாழக்கிழமை  யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆளுநரிடம் தெரிவித்தார்.

மக்களின் அன்றாட வாழ்க்கையை வலுப்படுத்த இராணுவம் தனது பூரண ஆதரவை வழங்கும். என்பதை உறுதியடுத்தியதாக தெரிவித்தார்.