நைஜரின் தென்மேற்கு பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் ஒரு மேயர் உட்பட குறைந்தது 69 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

மாலியின் எல்லைக்கு அருகில் உள்ள தில்லாபெரியின் மேற்குப் பகுதியில், நகரத்திலிருந்து சுமார் 50 கிமீ (30 மைல்) தொலைவில் செவ்வாயன்று இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

இதில் பானிபாங்கோவின் மேயர் கொல்லப்பட்டுள்ளார்.

வியாழன் அன்று இறந்தவர்களின் எண்ணிக்கையை அறிவித்த உள்துறை அமைச்சர் அல்காசே அல்ஹாடா அரசு தொலைக்காட்சியில் 15 பேர் உயிர் பிழைத்துள்ளதாகவும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தென்மேற்கு நைஜரின் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களில் ஆயுதக் குழுக்கள் 530 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளனர்.

இது 2020 ஆம் ஆண்டை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.