தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாடு இருண்ட யுகமாகும் ; அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக ஸ்ரீ மெதகம தம்மானந்த தேரர்

Published By: Digital Desk 3

05 Nov, 2021 | 11:27 AM
image

(இராஜதுரை ஹஷான்)

இனங்களுக்கிடையிலான தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாட்டின் எதிர்காலம் இருண்ட யுகத்தை நோக்கியதாக அமையும். குறுகிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள் மதங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். 

அரசியல்வாதிகள் அதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என அஸ்கிரி பீடத்தின் அநுநாயக ஸ்ரீ மெதகம தம்மானந்த தேரர்  தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் பல்லின சமூகத்தினர் வாழ்கிறார்கள். இருப்பினும் இன நல்லிணக்கம் இதுவரையில் கேள்விக்குள்ளாக்கப்பட்டதாக காணப்படுகிறது. 

கடந்த காலங்களில் இனங்களுக்கிடையில் இடம் பெற்ற முரண்பாடுகளினால் ஒரு தரப்பினர் பயன்பெற்றுக் கொண்டதனை பல்வேறு சம்பவங்கள் ஊடாக அறிய முடிகிறது.

நாட்டின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசத்தின் தலையீடு எல்லைகடந்து சென்றுள்ளது. இவ்வாறான நிலையில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படாவிடின் நாட்டின் எதிர்காலம் இருண்ட யுகத்தை நோக்கில் செல்லும் என்பதில் ஆச்சிரியமில்லை.

மதங்களுக்கிடையில் திட்டமிட்ட வகையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். பிரச்சினைகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசியல்வாதிகள் பயனடைகிறார்கள். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கம் அரசியல்வாதிகளுக்கு கிடையாது. அத்துடன் இன நல்லிணக்கத்தை அரசியல்வாதிகள் விரும்புவதில்லை.

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு மத தலைவர்களுக்கு உண்டு மத தலைவர்கள். சமூகத்தை ஒன்றினைப்பதற்கு மத கொள்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்றார்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04