பொல்லால் அடித்து 3 பிள்ளைகளின் தாய் கொலை :  - வட்டவளையில் சம்பவம்

05 Nov, 2021 | 10:37 AM
image

வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து 3 பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று (04.11.2021) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அயல் குடும்பத்திற்கும், தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட கைகலப்பை சமாதானப்படுத்த சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு இறந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி வயது 57 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அட்டன் நீதிமன்றத்தின் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து அட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமந்தை பகுதியில் ரயில் விபத்து ;...

2024-09-11 02:15:39
news-image

வவுனியா - தாண்டிக்குளத்தில் மோட்டர் குண்டு...

2024-09-11 02:03:48
news-image

யாழில் உயர்தரப் பிரிவு மாணவிக்கு எமனாக...

2024-09-11 00:07:11
news-image

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும்...

2024-09-10 23:12:17
news-image

இலங்கை இளைஞர்கள் 2252 பேருக்கு இஸ்ரேலிலில்...

2024-09-10 19:46:59
news-image

தமிழர்களை ஒன்றுபட்டு வாக்களிக்குமாறு அறிக்கை வெளியிட...

2024-09-10 20:57:49
news-image

முதலாளிமார் சம்மேளனம் வழக்குகளை வாபஸ் பெற...

2024-09-10 19:43:45
news-image

மாத்தறையில் போலி ஆவணங்களுடன் ஐவர் கைது

2024-09-10 19:46:29
news-image

3 வயது சிறுமி மீது பாலியல்...

2024-09-10 19:39:00
news-image

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை...

2024-09-10 19:37:55
news-image

அதிரடியாக 5 இராஜாங்க அமைச்சர்கள் பதவி...

2024-09-10 19:18:17
news-image

சகல வேட்பாளர்களினதும் விஞ்ஞாபனங்களை அலசி ஆராய்ந்து...

2024-09-10 19:03:50