2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தின் முடிவில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டுவைன் பிராவோ உறுதி செய்துள்ளார்.

Story Image

ஆகஸ்ட் மாதம் அணித் தலைவர் கீரன் பொல்லார்ட், பிராவோ  தனது இறுதி டி-20 போட்டியை கரீபியனில் விளையாடியதாக அறிவித்தார்.

வியாழன் அன்று இலங்கை அணியுடனான தோல்வியைத் தொடர்ந்து, ஐ.சி.சி.யின் போட்டிக்கு பிந்தைய முன்னாள் அணித் தலைவர் டேரன் சமி மற்றும் வர்ணனையாளர் அலெக்ஸ் ஜோர்தனுடனான உரையாடலில் தனது ஓய்வை பிராவோ உறுதிப்படுத்தினார்.

18 வருடகால கிரிக்கெட் வாழ்வில் 38 வயதான பிராவோவின் இரண்டு முறை டி-20 உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் ஒரு உறுப்பினராக இருந்துள்ளார்.

அதேநேரம் ஏழு டி-20 உலகக் கிண்ண தொடர்களில் விளையாடியுள்ளார்.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக 90 டி-20 போட்டிகளில் விளையாடி 78 விக்கெட்டுகளை வீழ்த்தி 1000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார்.

சீம்-பவுலிங் ஆல்-ரவுண்டர் 2004 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார், ஒட்டுமொத்த கிரிக்கெட் வடிவில் 500 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார்.