நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இஞ்சஸ்ரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்விபயிலும் 15வயது மாணவியை டிக்கோயா இஞ்சஸ்ரி தமிழ் வித்தியாலயத்தின் 32 வயது ஆசிரியா் ஒருவா் சில்மிசம் செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த ஆசிரியா் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யபட்ட சம்பவம் ஒன்று கடந்தவாரம் பதிவாகியுள்ளது.

குறித்த பாடசாலையின் விடுதியில் தங்கியிருக்கும் ஆசிரியா் மாணவியை மேலதிக வகுப்புக்கு வருமாறு அழைத்து விடுதியில் வைத்து அந்த மாணவியை ஆசிரியா் சில்மிசம் செய்தார் என சிறுமியின் பெற்றோர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனா்.

முறைப்பாட்டுக்கு அமைய விசாரனைகளை ஆரம்பித்த நோர்வூட் பொலிஸார் சம்பவம் தொடா்பில் சந்தேகத்தின் பெயரின் குறித்த ஆசிரியா் கைது செய்யப்பட்டு அட்டன் நீதவான் முன்னிலையில் அஐா்படுத்தபட்டபோதே விளக்கமறியில் குறித்த ஆசிரியரை வைக்குமாறு உத்தரவுபிறப்பிக்கபட்டதாக தெரிவிக்கபடுகிறது.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த  ஆசிரியருக்கு கடந்த 19 ஆம் திகதி சரீரபிணையில் விடுதலை செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.