நீண்ட கால முடக்கத்திற்கு பின் கொண்டாடப்பட்டது தீபாவளி !

04 Nov, 2021 | 02:11 PM
image

உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையினை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் நீண்ட கால கொரோனா பெருந்தொற்று முடக்கத்திற்கு பின்னர் இலங்கை வாழ் இந்துக்களும் தீபதிருநாளை இன்று கொண்டாடினர்.

வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ள போதும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மதியில் இம் மக்கள் பண்டிகையை தத்தம் குடும்பங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதேவேளை தீபதிருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள கோவில்கள் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.

 

பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற தீபாவளி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டதோடு பிரதமர் தனது வாழ்த்து செய்திகளையும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற தீபாவளி

மேலும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் விசேட தீபாவளி உற்சவம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இருளை அகற்றி ஒளியைப் பெற்றுக் கொள்வதற்கு பல்லாயிரக்கணக்கான “விளக்குகளை” ஏற்றி பிரார்த்தனை புரிகின்ற உலக வாழ் இந்து பக்தர்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் என்று பிரார்த்தனை செய்த வண்ணம் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் விசேட தீபாவளி உற்சவம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்றது.

ஐக்கிய மகளிர் சக்தியின் உப தலைவர் உமாசந்திர பிரகாஷின் பிரதான ஏற்பாட்டில்  மேற்கொள்ளப்பட்ட இந் நிகழ்வில் மனோ கணேசன், பழனி திகாம்பரம்,புத்திக பத்திரன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அலுவலக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கொழும்பு 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை கொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதையும் , பெருமளவான பக்தர்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.

(படப்பிடிப்பு : தினெத் சமல்க)

புத்தளம் 

புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் இன்று தீபவளி பண்டிகையை மிகவும் எளிமையாகவும்  அமைதியாகவும் தத்தமது வீடுகளில் கொண்டாடி வருகின்றனர். நீராடி புத்தாடை அணிந்து ஆலயங்களுகக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னிநாதர் சுவாமி ஆலயத்தில் இன்று காலை முதல் தீபாவளி விஷேட பூஜைகள் இடம்பெற்றன. 

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மக்கள் முகக் கவசங்களை அணிந்த வண்ணம் வருகைத் தந்ததோடு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

 கடந்த ஆண்டு கொவிட் தொற்று காரணமாக தீபாவளி கொண்டாட்டம் ஒரு இக்கட்டன நிலையில் காணப்பட்டவேளை இந்த ஆண்டு ஓரளவுக்கு சுமூகமான நிலைக் காணப்படுவதால் மக்கள் மிக மகிழ்ச்சியோடு  தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. 

மலையகம்

மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை (04.11.2021) இன்று வெகுவிமர்சியாக கொண்டாடினார்கள்.

அட்டன் பகுதியில் அட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ பூர்ணசந்திராநந்த குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

 விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா அச்சம் காரணமாக எளிய முறையில் இந்து மக்கள் தங்களது பண்டிகையை புத்தாடைகள் அணிந்து சமய வழிபாடுகளில் ஈடுப்பட்டு, உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துகளை தெரிவித்து, வீடுகளில் சிறப்பாக கொண்டாடினர்.

யாழ்ப்பாணம்

உலகம் முழுவதும்  இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையிலும் கொரோனா தொற்று அச்ச நிலையிலும் மக்கள் தீபவத்திருநாளை கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் தீபத்திருநாள் விசேட பூஜைகள் இடம்பெற்றுள்ளன.

இதில் பெருமளவான பக்தர்கள் வழிபாடுகளில் பங்கேற்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

3 கோடி ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளை...

2024-04-14 12:51:19
news-image

யாழ் நகரின் சுகாதார நிலைமைகள் தொடர்பில்...

2024-04-14 12:21:07
news-image

வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, ஹம்பகா,...

2024-04-14 07:01:00
news-image

காலியிலிருந்து சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளையில்...

2024-04-13 20:07:33
news-image

மருத்துநீர் வழங்கும் நிகழ்வு !

2024-04-13 19:55:36
news-image

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...

2024-04-13 19:50:47
news-image

இன்று பிறக்கிறது குரோதி புதுவருடம் ! 

2024-04-13 15:44:56
news-image

உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட சந்தை...

2024-04-13 15:32:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக...

2024-04-13 15:33:20
news-image

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறையிலிருந்த 10...

2024-04-13 15:28:49
news-image

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன்...

2024-04-13 15:09:06
news-image

இன்றைய வானிலை

2024-04-13 06:21:24