தமிழ் சமூகத்திற்கு பெருமை தேடித்தந்த செல்வன் அனந்த நாராயணன் சர்மா

Published By: Digital Desk 3

06 Nov, 2021 | 12:05 PM
image

ACCA (Association of Chartered Certified Accountants) இறுதிப் பரீட்சை நிலையில்  உள்ள "Advanced Audit & Assurance" (AAA/P7) எனும்  பாடத்திற்கு இலங்கையில்  அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினையும் உலகளாவிய ரீதியில் 19 ஆவது இடத்தினையும் பெற்று (Sri Lanka Rank 1st &  World Rank 19th) இலங்கைக்கு மட்டுமல்லாது தமிழ் சமூகத்திற்கும் செல்வன் சு. அனந்த நாராயணன் சர்மா பெருமை சேர்த்துள்ளார்.

செல்வன் சு. அனந்த நாராயணன் சர்மா தனது கல்வியினை கொழும்பு றோயல் கல்லூரியில் பயின்றார். இவர் தனது ஆரம்பக்கல்வியில் மிகவும் சிறந்து விளங்கினார்.

அதுமட்டுமல்லாது  ACCA (Association of Chartered Certified Accountants) எனும் Professional Qualification பரீட்சையில்  Diploma in Accounting and Business in FIA எனும் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.

இதில் மேலே குறிப்பிட்ட பாடத்திற்கு இவர் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் கல்வியில் மட்டுமல்லாது இசைத்துறையிலும் சிறந்து விளங்குகின்றார்.

செல்வன் சு. அனந்த நாராயணன் சர்மா  யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மற்றும் கொழும்பு பம்பலப்பிட்டியைச் சேர்ந்த பிரபல மிருதங்க வித்துவான் மற்றும் பிரபல பட்டயக் கணக்காளருமான பிரம்மஸ்ரீ A.G.S. சுவாமிநாதன் சர்மா தம்பதிகளின் இரண்டாவது பிள்ளையாக "கொழும்பில் 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி பிறந்தார். 

கொழும்பு றோயல் கல்லூரியில் இவர் கல்வி கற்கும் காலத்தில் பல போட்டிகளில் பங்குபற்றி அகில இலங்கை ரீதியில் பலதரப்பட்ட பரிசுகளையும் பதக்கங்களையும் வென்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இறந்த தம் மூதாதையருடன் இயல்பாக பேசும்...

2024-04-18 12:15:34
news-image

வவுனியா, கோதண்டர் நொச்சிக்குளத்தில் நாகர் கால...

2024-04-18 10:23:08
news-image

'குரோதி' வருடப்பிறப்பு - சுப‍ நேரங்கள் 

2024-04-11 14:47:43
news-image

திருக்கோணேஸ்வரத்தில் சாமி தூக்கிய சுற்றுலா பயணிகள்...

2024-04-06 11:06:59
news-image

சித்தி விநாயகர் கும்பாபிஷேகம்

2024-03-28 16:01:41
news-image

நல்லூர் மனோன்மணி அம்மன் ஆலய பங்குனி...

2024-03-19 16:13:26
news-image

ஈழத்து லிங்காஷ்டகம் : மறந்துபோன வரலாறுகள்!...

2024-03-10 13:57:26
news-image

இன்று மகா சிவராத்திரி!  

2024-03-08 11:05:25
news-image

இன்று சர்வதேச தாய்மொழி தினம் 

2024-02-21 12:08:36
news-image

சிவானந்தினி துரைசுவாமி எழுதிய தந்தை -...

2024-02-07 13:18:00
news-image

வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் :...

2024-01-29 17:43:35
news-image

அயோத்தி ராமர் கோவிலை இந்தியப் பிரதமர்...

2024-01-22 15:53:05