இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களுக்கு சுகாதார பாதுகாப்பு காப்புறுதி வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் யூனியன் அசூரன்ஸ் காப்புறுதி நிறுவனத்துக்கும் இடையில்  கைச்சாத்திடப்பட்டது. 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்ப்பாக அதன் செயலாளர்  சட்டத்தரணி ரஜிவ் அமரசூரிய மற்றும் யூனியன் அசூரன்ஸ் காப்புறுதி நிறுவனம் சார்ப்பாக அதன் பிரதி பொது முகாமையாளர் திலின ராஜபக்ஷ் ஆகியோர் கைச்சாத்திடப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்த ஆவணம் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளது.

(படப்பிடிப்பு எம். எஸ்.சலீம்)