தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 400 ஆண்டுகள் பழமையான பித்தளை கணபதி சிலையை இந்திய சுங்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

இந்த சிலை 130 கிலோ எடையும் 5.25 அடி உயரமும் கொண்டது.
கைப்பற்றப்பட்ட சிலை தொல்பொருள் மற்றும் கலை பொக்கிஷங்கள் சட்டத்தின் கீழ் இந்திய தொல்லியல் துறையிடம் பதிவு செய்யப்படவில்லை.
சிலையை ஆய்வு செய்த அதிகாரிகள், சிலை விவரங்களின் அடிப்படையில் இது 400 ஆண்டுகளுக்கும் மேலான பழமையானது என்றும், விஜயநகர-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது என்றும் தெரிவித்தனர்.