புத்தளம், முந்தல் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த முந்தல் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.
சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
பள்ளம பகுதியைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ. எம்.ஆர். பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று, குறித்த போக்குவரத்து பொறுப்பதிகாரி கடமை நிமித்தம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதியைக் கடக்க முற்பட்ட போது, சிலாபத்திலிருந்து புத்தளம் பகுதி நோக்கிச் பயணித்த பட்டா லொறியொன்று அவர் மீது மோதியுள்ளது.
அதனையடுத்து, புத்தளத்திருந்து சிலாபம் நோக்கிப் பயணம் செய்த மற்றுமொரு சொகுசு கார் ஒன்றும் அதே சமயம் பொறுப்பதிகாரி மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விரண்டு வாகனங்களும் இவ்வாறு ஒரே சந்தர்ப்பத்தில் மோதியதில் படுகாயமடைந்த போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியை அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரிக்கு இரண்டு நாட்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் அவர் நேற்றிரவு (03) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் முந்தல் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த வாகன சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் தலைமையக பொலிஸாரும், முந்தல் பொலிஸாரும் இணைந்து விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM