நாட்டில்  இன்று புதன்கிழமை (03) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 21 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13,791 ஆக உயர்வடைந்துள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 06 ஆண்களும் 15 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.  இதில் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டவர்களில் 5 பெண்கள் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 6 ஆண்களும் 10 பெண்களுமாக 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 541 955  ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 513 880 பேர் குணமடைந்துள்ளனர். 14 629 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.