(க.கமலநாதன்)

புதிய அரசியலமைப்பு புலிகள் அமைப்பின் மீள் உருகாத்திற்கு வலு சேர்ப்பதாகவும் இனங்களுக்கிடையில் முறுகள் நிலையை ஏற்படுத்துவதற்கும் பிரதான காரணமாக அமையும் என்ற கூட்டு எதிரணியின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது வெளிநாடுகளில் எமது நாட்டினை பாராட்டி, நாடு குறித்த நல்ல அபிப்பிராயங்களை வெளிபடுத்துகின்றனர். குறிப்பாக அமெரிக்க தலைவர் பராக ஒபாமா எமது நாட்டின் செயற்பாடுகளை வாழ்த்தியுள்ளார்.  

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா.அமர்வுகளில் பங்கேற்கச் சென்றுள்ளார். அங்கு அவருக்கும் எமது நாட்டுக்குமான ஆதரவும் பெருகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனம் நாட்டின் தற்கால நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் நாளுக்கொரு பொய்வீதம் உருவாக்கிகொண்டிருக்கு கூட்டு எதிரணி நாடு பிளவு பட போகின்றது என்ற எண்ணப்பாட்டை மக்களிடத்தில் பரவச் செய்கின்றனர். 

அதேபோல் அரசியலமைப்பு தொடர்பில் இவர்கள் விமர்சிக்காத காரணமே இல்லை. புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கான முதன்மை நிலை இல்லாது செய்யபட போகின்றது என்றனர். அதனால் தற்போதைய அரசாங்க தரப்பினரை மதசார்பற்றவர்களாகவும் அடயாளப்படுத்த முயற்சித்தனர். இவ்வாறான நிலையில் அஸ்கிரிய தேரர் இது தொடர்பில் தமது நிலைப்பாட்டினை சிறப்பாக விளக்கினார். 

மேலும் புதிய அரசியலமைப்பில் சமஷ்டி உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கா வெளிநாட்டிள் உள்ளவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். என்றும் குற்றம் சாட்டினர். ஆனால் அந்த கருத்துக்கள் அனைத்து இன்று பொய்யாகியுள்ளன. அதேநேரம் புதிய அரசியலபைப்பு தொடர்பில் இது வரையில் எந்த வித செயற்பாடுகளும் முன்னெடுக்கவில்லை தற்போதுவரையில் இந்த விவகாரம் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே உள்ளது. 

எவ்வாறாயினும் அரசாங்க தரப்பு என்ற வகையில் இந்த நாட்டை பிளவு படுத்தும், மத வேறுபாடுகளை ஏற்படுத்தும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையிலான செயற்பாடுகளை நாம் ஒருபோதும் முன்னெடுக்கபோவதில்லை என்று உறுதிப்பட கூறுகின்றோம். மேலும் புதிய அரசியலமைப்பு யுத்தினை ஏற்படுத்தி ஜனாநாயகத்தை சீர்குழைக்கும் ஒரு அரசியலமைப்பு ஒருபோதும் உருவாக்கப்படாது.