மலையகத்திற்கான தனிப்பல்கலையை அமைப்பதற்கு  இதுவே சரியான தருணம் 

Published By: Ponmalar

22 Sep, 2016 | 05:49 PM
image

மலையகத்திற்கான தனிப்பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான தக்க தருணம் ஏற்பட்டுள்ளதாக சபையில் தெரிவித்த  பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  அரவிந்த குமார் காலம் தாழ்த்தாது தேசிய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

மலையகத்திலிருந்து தற்போது 200 மாணவர்களே ஆண்டுதோறும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய அவர் இத்தொகையை 1500ஆக அதிகரிக்கவேண்டுமெனவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் இன்று பல்கலைக்கழக திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

மலையக பகுதியில்  ஆண்டொன்றுக்கு 200 பேரே பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகின்றனர். ஒரு வருடத்திற்கு ஆகக் குறைந்தது 1500 பேர் தெரிவாகுவதன் மூலமே உரிய வளர்ச்சியை எமது பகுதிகள் எட்டமுடியும். மலையகத்திற்கென தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டுமென்ற கோரிக்கைகள் ஆண்டாண்டு காலமாக காணப்படுகின்ற போதும் அது தற்போது வரையில் பூரணப்படுத்தும் வகையில் எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாதிருப்பது கவலையளிக்கின்றது.

தற்போது தேசிய அரசாங்கம் கல்வி அபிவிருத்திக்காக பல்வேறு செயற்றிட்டங்களை மேற்கொண்டு  வருகின்றது. மலையகத்தில் தனியான பல்கலைகழகம் அமைப்பதற்கு சரியான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நல்லாட்சியை முன்னிலைப்படுத்தும் தேசிய அரசாங்கம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் மலையக மக்களின் எதிர்காலத்திற்காக பல்கலைக்கழகமொன்றை தற்போது நிறுவவேண்டியது அவசியம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21