பண்டிகை காலத்தில் பொறுப்புடனும், அவதானத்துடனும் செயற்படுங்கள் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை

Published By: Digital Desk 3

03 Nov, 2021 | 03:59 PM
image

(எம்.நியூட்டன்)

தீபாவளி பண்டிகை காலத்தில் சுகாதார வழிகாட்டல்களைப் பேணி பொறுப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவா்  விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது நாட்டில் இந்துப்பெருமக்கள் தற்போது தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தற்போது நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையும், இறப்புக்களின் எண்ணிக்கையும் பாரியளவில் வீழ்ச்சி அடைந்திருந்தாலும் தினமும் நாட்டில் 500க்கு மேற்பட்ட நோயாளர்கள் இனங்கானப்படுவதுடன், இறப்புக்களும் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

இந்த ஆண்டு சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னர் எமது நாட்டில் பாரியதொரு கொவிட்-19 தொற்றுப் பரம்பல் ஏற்பட்டதை நினைவுபடுத்த விரும்புகிறேன். 

இந்நிலையில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடனும், அவதானத்துடனும் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி இப்பண்டிகையை கொண்டாட வேண்டுமென எதிர்பார்க்கிறோம். இல்லாவிடின் சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் ஏற்பட்டதைப் போன்று பாரியதொரு தொற்றுப் பரம்பல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே இந்நிலையை கருத்தில் கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் புத்தாடைகளை வாங்குவதற்காக வர்த்தக நிலையங்களில் ஒன்று கூடும்போதும், ஆலயங்களில் வழிபாடுகளுக்காக ஒன்று கூடும்போதும் கொவிட் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பாக கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசங்களை சரியான முறையில் அணிந்து கொள்ளல், சமூக இடைவெளியை பேணுதல் போன்றவற்றை இறுக்கமாக கடைப்பிடிக்கவும். 

பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் நிகழ்வுகளை இயலுமான வரை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எனவே பொதுமக்கள் அனைவரையும் இப்பண்டிகை காலத்தில் பொறுப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறு வேண்டிநிற்கிறோம் என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38