வட கிழக்கில் எவரும் சேதன பசளைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்படவில்லை - மஹிந்தானந்த அளுத்கமகே

Published By: Digital Desk 3

03 Nov, 2021 | 11:30 AM
image

(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாயிகள் தமக்கான சேதன பசளையை சுயமாக உற்பத்தி செய்து பெரும்போக விவசாயத்தில் ஈடுப்படுகிறார்கள். எவரும் சேதன பசளைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்படவில்லை.

தெற்கில் உள்ள விவசாயிகள் தான் இரசாயன உரத்தை கோரி வீதிக்கிறங்கியுள்ளார்கள் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பேராதெனிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பெரும்போகத்தில் எட்டு இலட்சம் ஹேக்கர் நெற்செய்கை காணியில் 5 இலட்ச ஹேக்கர் காணியின் விவசாய நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் விவசாயிகள் விவசாயத்தில் முழுமையாக ஈடுப்படுவார்கள்.

நெற்செய்கைக்கு தேவையான சேதன பசளை உரம் விவசாயிகளுக்கு தேவையான அளவு வழங்கப்படும். தெரிவு செய்யப்பட்ட பயிர்ச்செய்கைகளுக்கான கிருமிநாசினிகள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

 பெரும்பாலான பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாயிகள் சேதன பசளை உரத்தை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

 இப்பிரதேச விவசாயிகள் தமக்கான உரத்தை சுயமாக உற்பத்தி செய்துக் கொண்டுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எவ்வித போராட்டமும் கிடையாது.

தெற்கில் உள்ள விவசாயிகள் இரசாயன உரத்தை கோரி வீதிக்கிறங்கி போராடுகிறார்கள். உண்மையான விவசாயிகள் போராட்டத்தை ஈடுப்படவில்லை. அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் சேதன பசளை திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.

பொலன்னறுவை மாவட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகளில் எத்தனை பேர் உண்மையான விவசாயிகள் என்பதை ஆராய் வேண்டும். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு வழங்கப்பட்டுள்ளது . 

ஆகவே விவசாயிகள் அரசியல்வாதிகளின் குறுகிய நோக்கங்களுக்கு அகப்படாமல் சேதன பசளை திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44