சீனா, ரஷ்யா மீது சீறிப்பாய்ந்தார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

03 Nov, 2021 | 11:10 AM
image

ஜி 20 நாடுகள் மாநாட்டை புறக்கணித்த சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சீன அதிபர் சி ஜிங்பிங் மிகப்பெரிய தவறு செய்து விட்டார் என்று கிளாஸ்கோவில் உரை நிகழ்த்திய ஜோ பைடன் குறிப்பிட்டார்.

உலகம் சீனா மீது மதிப்பு இழந்து வருவதாக குறிப்பிட்ட அவர், கிளாஸ்கோவில் நடைபெற்ற ஐ.நா.வின் பருவ நிலை மாநாட்டை புறக்கணித்த சீனா மற்றும் ரஷ்யா எதிர்காலத்தில் தங்கள் மக்களுக்கு என்ன பதிலைக் கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

உலகம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய ஒரு பிரச்சினையில் புறமுதுகு காட்டுவதுதான் இந்த இரு நாடுகளின் தலைமைக்கு அழகா என்றும் ஜோ பைடன் விமர்சித்தார்.

Major methane deal at climate summit — without China | The Japan Times

இத்தாலியில் உள்ள ரோம் நகரில் நடைபெற்ற ஜி-20 காலநிலை மாநாட்டில், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்ரேலியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்டனர்.

ஆனால், சீனா ஜனாதிபதி ஸி ஜின்பிங் மற்றும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் இதுகுறித்து பைடன் கூறுகையில், ‘உச்சி மாநாட்டின் காலநிலை தொடர்பாக பல நாடுகளின் வாக்குறுதிகள் குறைவானவை என்று சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருதுகின்றன. இதற்கு ரஷ்யாவும் சீனாவும் மாநாட்டில் நேரடியாக பங்கேற்காதது முக்கிய காரணம். இது ஏமாற்றத்தை அளிக்கிறது.

Biden urges the world to remain optimistic about climate change | Marca

ரஷ்யாவும் சீனாவும் அடிப்படையில் காலநிலை மாற்றத்தை கையாள்வதில் எந்த உறுதிப்பாட்டையும் காட்டவில்லை. இது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது.

நிலக்கரிக்கான மானியத்தை முடிவுக்குக் கொண்டுவர பல விடயங்களை இங்கே பேசி, நிறைவேற்றியுள்ளோம், என்ன செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் அனைவரும் உறுதியாக உள்ளோம். அதற்கான உறுதிமொழி எடுத்தோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47