சீனிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கு சீனியை தட்டுப்பாடு இன்றி வழங்குவது தொடர்பில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும் சீனி இறக்குமதியாளர்களுக்கும் இடையில் நேற்று (2) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது இறக்குமதியாளர்களுக்கு தேவையான சீனியை தட்டுப்பாடு இன்றி வழங்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இந் நிலையில் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (3) வெளியிடப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.