இத்தாலிய கம்பெனியா பிராந்தியத்தைச் சேர்ந்த 61 வயது பெண்ணொருவர் இயற்கையான முறையில் கருத்தரித்து திங்கட்கிழமை மாலை ஆரோக்கியமான ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதன்பிரகாரம் இயற்கையான முறையில் கருத்தரித்து குழந்தையைப் பிரசவித்த உலகின் மிகவும் வயதான தாயாக தான் விளங்குவதாக மரியா ரொஸாரியா வெனருஸோ என்ற மேற்படி பெண் உரிமைகோரியுள்ளார்.

கம்பனியா பிராந்தியத்தில் காஸ்டெல் வொல்துர்னோ எனும் இடத்திலுள்ள மருத்துவமனையில் பிறந்த இந்தக் குழந்தைக்கு எலியா பிரான்செஸ்கோ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மகப்பேற்று மருத்துவ நிபுணரான லெயிலா ஹன்னா தெரிவிக்கையில், “அற்புதம் ஒன்று நிகழ்ந்தாலேயே இவ்வாறு இடம்பெறுவதற்கு முடியும். ஆனால் 61 வயதுப் பெண்ணொருவர் இயற்கை முறையில் கருத்தரித்துக் குழந்தையைப் பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை என்றே நான் கருதுகிறேன்" என்று கூறினார்.