பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் கட்ட சம்பள பேச்சுவார்த்தை  இன்று கொழும்பிலுள்ள தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் நடைபெற்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு இறுதித்தீர்வு பெற்றுகொடுக்கும் நோக்கில் இன்று காலை ஆரம்பமான ஒன்பதாம் கட்டப் பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாமல்  மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளர்து.

இந்த பேச்சு வார்த்தையில் தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்கங்களினால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் முதலாளிமார் சம்மேளனத்தின் தரப்பினர்கள் எவ்வித பதில்களும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே சம்பள உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.