(துபாயிலிருந்து நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் இங்கிலாந்தை தொடர்ந்து இரண்டாவது அணியாக பாகிஸ்தான் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
அபு தாபியில் செவ்வாய்க்கிழமை (2) இரவு நடைபெற்ற நமிபியாவுக்கு எதிரான குழு 2க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 45 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலமே பாகிஸ்தான் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
பாகிஸ்தான் இன்றுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றிளை ஈட்டி தோல்வி அடையாத அணியாகத் திகழ்கின்றது.
மொஹம்மத் ரிஸ்வான், அணித் தலைவர் பாபர் அஸாம், சிரேஷ்ட வீரர் மொஹம்மத் ஹவீஸ் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள் பாகிஸ்தானின் வெற்றிக்கு அடிகோலின.
ரிஸ்வான், அஸாம் ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் இரண்டாவது தடவையாக 100 ஓட்டங்களுக்கு மேல் பகிர்ந்தமை விசேட அம்சமாகும்.
இவர்கள் இருவரும் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ரிஸ்வான் 50 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்ட்றிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 79 ஓட்ட்ஙகளையும் பாபர் அஸாம் 49 பந்துகளில் 7 பவுண்ட்றிகளுடன் 70 ஓட்டங்களையும் பெற்றனர். நடப்பு இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ரிஸ்வான் இரண்டாவது அரைச் சதத்தையும் பாபர் அஸாம் மூன்றாவது அரைச் சதத்தையும் பூர்த்திசெய்தனர்.
இவர்களை விட 41 வயதான மொஹம்மத் ஹபீஸ் 16 பந்துகளில் 5 பவுண்ட்றிகளுடன் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றார். இவர் ரிஸ்வானுடன் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
190 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா, 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று 45 ஓட்டங்களால் கௌரவமான தோல்வியைத் தழுவியது.
நமிபியா துடுப்பாட்டத்தில் டேவிட் வைஸ் 31 பந்துகளில் 3 பவுண்ட்றிகள, 2 சிக்ஸ்களுடன் ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றார்.
க்ரெய்க் வில்லியம்ஸ் 37 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், ஒரு சிக்ஸுடன் 40 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் ஸ்டீவன் பார்ட் 29 ஓட்டங்களையும் அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM