நடிகர் சூர்யா தற்போது சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்படம் வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்த 'நானும் ரவுடி தான்' இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானது. ஆனால் படத்தின் தலைப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழ் படத் தலைப்புக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறிது காலமாக பழைய படங்களின் தலைப்பு, ரஜினி படத் தலைப்பு, பாடல் வரிகள் தலைப்பு என வைத்து வந்த காலம் மாறி இப்போது ரஜினியின் படத்தில் இடம்பெற்ற பஞ்ச் வசனத்தில் சூர்யா தனது 35 ஆவது படத்துக்கு "தானா சேர்ந்த கூட்டம்" என்ற தலைப்பை அறிவித்துள்ளார். இது பாட்ஷா, படையப்பா போன்ற படங்களில் ரஜினியின் பிரபலமான வசனமாகும்.
குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகர் சூர்யா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை தனது சொந்த பட நிறுவனமான 2d Entertainment மற்றும் Studio Green உடன் இணைந்து தயாரிக்கிறார். மேலும் சூர்யா படத்திற்கு முதல் முறையாக அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM