புதிய அரசியலமைப்பும் அரசியல் தீர்வும் : Photos (2)

சமர்ப்பித்தல் MD.Lucias on 2016-09-22 16:29:54

புதிய அரசியலமைப்பின் பூர்வாங்க வரைவு (Draft Constitution) எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு–செலவுத்திட்டம் மீதான விவாதம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்கத்தலைவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த வருடத்துக்கான அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டம் நவம்பர் 10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என்றும் தொடர்ந்து ஒருமாத காலத்துக்கு அதன் மீதான விவாதம் நடைபெறும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறானால், அரசியலமைப்பு வரைவு இன்னமும் 6 வார காலத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும்.