எம்.நியூட்டன்
வடமாகாண ஆளுநர் செயலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள், வீட்டுத்திட்ட பயனாளிகள் இன்று செவ்வாய்க்கிழமை (2) காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுங்கமைப்பில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினை வலியுறுத்தி வலிகாமம் வடக்கு பிரதேசத்தை சேர்ந்த மக்களால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் போராட்டத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு முதற்கட்ட நிதி மட்டுமே பெற்ற நிலையில் வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்யமுடியாமல் உள்ள பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் "அரசே எம்மை வாழ விடு இல்லை வழியை விடு", "அரசே எமது வீட்டுத் திட்ட நிதியை தா" என்பன போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாகைகளை தாங்கியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 2 ஆயிரத்து 19 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூர்த்தி செய்யுமாறு கோரியும், விவசாயிகளின் இரசாயன உரங்கள் தடைசெய்யப்பட்டவை தொடர்பிலும் மற்றும் கால்நடை தீவனங்களின் விலை அதிகரிப்பு தொடர்பாகவும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM