மேற்கு கரையில் 1,303 பாலஸ்தீனிய வீடுகளுக்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அனுமதி

By Vishnu

02 Nov, 2021 | 11:42 AM
image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனிய கிராமங்களில் 1,303 வீடுகளை கட்டும் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலின் சிவில் நிர்வாகம் திங்களன்று ஒப்புதல் அளித்துள்ளது. 

Palestinian man holds a Palestinian flag as Israeli heavy machinery demolish vacant apartment blocs by order of Israel''s high court, in the West Bank Jewish settlement of Beit El near Ramallah

இருப்பினும், பர்தா கிராமத்தில் 170 வீடுகளுக்கு மட்டுமே இறுதி அனுமதி வழங்கப்பட்டது; மீதமுள்ளவர்களுக்கு, கட்டிட அனுமதிக்கான ஒப்புதல் பல ஆண்டுகள் ஆகலாம்.

இந்த கிராமங்கள் அனைத்தும் ஒஸ்லோ உடன்படிக்கையின் கீழ் இஸ்ரேலிய இராணுவ மற்றும் சிவில் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மேற்குக் கரையின் பகுதி C இல் அமைந்துள்ளன.

இஸ்ரேல் 1967 இல் ஜோர்தானிலிருந்து மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியது.

2.5 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் வசிக்கும் மேற்குக் கரையை, யூத மக்களின் விவிலிய மற்றும் வரலாற்று மையப்பகுதியாக இஸ்ரேல் கருதுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right