அரை இறுதிப்போட்டியில் விளையாடுவதை இன்று உறுதிசெய்யுமா பாகிஸ்தான்?

Published By: Gayathri

02 Nov, 2021 | 11:17 AM
image

(துபாயிலிருந்து நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபதுக்கு 20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இரண்டாவது அணியாக தகுதி பெறுவதை பாகிஸ்தான் இன்று உறுதி செய்யும் என நம்பப்படுகின்றது.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக பங்குபற்றும் நமிபியாவை அபுதாபி விளையாட்டரங்கில் இன்று இரவு பாகிஸ்தான் எதிர்த்தாடவுள்ளது.

தனது முதல் 3 போட்டிகளில் மிகவும் கடினமான தனது பரம வைரி இந்தியாவை 10 விக்கெட்களாலும் அதனைத் தொடர்ந்து மற்றொரு பலம்வாய்ந்த நியூஸிலாந்தை 2 விக்கெட்களாலும் ஆப்கானிஸ்தானை 4 விக்கெட்களாலும் வெற்றிகொண்ட பாகிஸ்தான், இன்றைய போட்டியில் நமிபியாவிடம் பெரியளவில் சவாலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது.

எனினும் முதல் சுற்றில் அயர்லாந்தையும் சுப்பர் 12 சுற்றில் ஸ்கொட்லாந்தையும் அதிர்ச்சி அடையச் செய்து வெற்றிகொண்ட நமிபியா, தன்னாலான அதி சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்த முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதன் மூலம் ஐக்கிய அரபு இராச்சிய ஆடுகளங்களுக்கு பரிச்சயமான வீரர்கள் இந்திய, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளில் இடம்பெறுகின்ற போதிலும் அவ்வணிகளினால் பாகிஸ்தானை வெற்றிகொள்ள முடியாமல் போனது.

உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் போதிய அளவு போட்டிகளில் பங்குபற்றாதபோதிலும் வீரர்கள் மத்தியில் நிலவும் தன்னம்பிக்கை, அர்ப்பணிப்புத்தன்மை, வெற்றிபெற வேண்டும் என்ற வைராக்கியம் ஆகியனவே பாகிஸ்தான் இந்த வெற்றிகளை ஈட்டுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தன.

பலம்வாய்ந்த அணிகளை வெற்றிகொண்ட பாகிஸ்தானுக்கு அடுத்த இரண்டு போட்டிகளும் அரை இறுதிக்கு தன்னை தயார்படுத்தும் போட்டிகளாக அமையவுள்ளது.

எனவே நமிபியாவுக்கும் ஸ்கொட்லாந்துக்கும் எதிரான அடுத்த இரண்டு சுப்பர் 12 சுற்று போட்டிகளிலும் பாகிஸ்தான் அதிகப்பட்ச ஆற்றலை வெளிப்படுத்த பாகிஸ்தான் வீரர்கள் முயற்சிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நடந்து முடிந்த 3 போட்டிகளில் பாகிஸ்தான் சார்பாக 8 பேரே துடுப்பெடுத்தாடியுள்ளனர். அவர்களில் அணித் தலைவர் பாபர் அஸாம், மொஹம்மத் ரிஸ்வான், ஷொயெப் மாலிக், பக்கார் ஸமான், அசிப் அலி ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி, ஹரிஸ் ரவூப், இமாம் வசிம் ஆகியோர் திறமையாக செயற்பட்டுள்ளனர்.

மறுபுறத்தில் பாகிஸ்தானின் பலத்துக்கு நமிபியாவால் ஈடுகொடுக்க முடியாமல் போனாலும் அவ்வணி தனது அதிகப்பட்ச ஆற்றலை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

டேவிட் வைஸ், ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ், க்ரெய்க் வில்லியம்ஸ் ஆகியோர் துடுப்பாட்டத்திலும் ஜேன் ப்ரைலின்க், ரூபென், ட்ரம்ப்ல்மான் ஆகியோர் பந்துவீச்சிலும் திறமையாக செயற்பட்டுள்ளமை நமிபிய அணிக்கு போனஸாக அமைகின்றது.

அணிகள்

பாகிஸ்தான்: பாபர் அபாஸ் (தலைவர்), மொஹம்மத் ரிஸ்வான், பக்கார் ஸமான், மொஹம்மத் ஹவீஸ் அல்லது ஹைதர் அலி, ஷொயெப் மாலிக், அசிவ் அலி, ஷதாப் கான், இமாம் வசிம், இமாம் வசிம், ஹசன் அலி அல்லது மொஹம்மத் நவாஸ், ஹரிஸ் ரவூப், ஷஹீன் ஷா அப்றிடி.

நமிபியா: க்ரெய்க் வில்லியம்ஸ், மைக்கல் வென் லிஞ்சென், ஜேன் நிக்கோல், லொவ்டி ஈட்டன், ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் (தலைவர்), ஸேன் க்றீன், டேவிட் வைஸ், ஜே.ஜே. ஸ்மித், ஜேன் ப்ரைலின்க், பிக்கி யா பிரான்ஸ், ரூபென் ட்ரம்ப்ள்மான், பேர்னார்ட் ஷோல்ட்ஸ்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடும்போக்குக்கு கடும்போக்கு, அமைத்திக்கு அமைதி; பங்களாதேஷ்...

2024-03-30 01:21:54
news-image

கோஹ்லியின் அதிரடி அரைச் சதம் வீண்போனது;...

2024-03-30 01:16:22
news-image

19 வயதின் கீழ் மகளிர் ரி20...

2024-03-29 21:51:00
news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22