ஞானசார தேரரின் நியமனம் குறித்து நீதியமைச்சர் வெளியிட்ட அதிருப்தி - ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவாராம்

Published By: Gayathri

01 Nov, 2021 | 08:33 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரைட இருக்கின்றேன். 

வெளிநாடு ஒன்றுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சென்றிருக்கும் ஜனாதிபதி நாடு திரும்பியதுடன் இதுதொடர்பில் கலந்துரையாட எதிர்பார்க்கின்றேன்.

'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டிருப்பமை தொடர்பாக பல்வேறு விமசனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் நீதி அமைச்சர் என்ற வகையில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, ஞானசார தேரரின் இந்த நியமனம் தொடர்பாக தனக்கு தெரியாது என்றும் இதுதொடர்பில் ஜனாதிபதி தன்னுடன் கலந்துரையாடவில்லை எனவும் அத்துடன் இந்த நியமனம் தொடர்பில் தனக்கு திருப்தியடைய முடியாது என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஜனாதிபதி செயலணி அமைத்து அதற்கு உறுப்பினர்கள் நியமிப்பது ஜனாதிபதியின் அதிகாரத்துடன் சம்பந்தமானது. அதுதொடர்பில் யாருடனும் கலந்துரையாட வேண்டும் என்றில்லை. 

சட்டத்துடன் சம்பந்தப்பட்ட விடயம் என்ற காரணத்தினாலே பலரும் இந்த செயலணி தொடர்பில் வினவுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மாதம் 26 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டு 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியை அமைத்து அதற்கான 13 உறுப்பினர்களின் பெயர்களையும் வெளியிட்டிருந்தார். 

அத்துடன் ஞானசார தேரரின் தலைமையிலான 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி முதல் தடவையாக கடந்த 31ஆம் திகதி கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே அஜித் மன்னம்பெருமவுக்கு வேட்புமனுவில்...

2024-10-13 19:23:56
news-image

ஐக்கிய மாதர் சக்தியின் தேசிய அமைப்பாளர்...

2024-10-14 02:42:39
news-image

இந்த மண்ணில் தமிழரசுக்கட்சியினால்தான் தமிழ் மக்கள்...

2024-10-14 02:23:21
news-image

யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழரசு...

2024-10-14 02:07:52
news-image

முக்கியமான தீர்மானங்களின் போது நபர்கள் தொடர்பில்...

2024-10-14 01:58:57
news-image

கொழும்பில் பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரகே...

2024-10-14 01:41:54
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57