மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் சவால்கள் 

Published By: Digital Desk 2

01 Nov, 2021 | 08:25 PM
image

மாற்றுத்திறனாளிகள் என்பது பிறப்பில் இருந்தோ அல்லது அதன்பின்போ ஒருவருக்கு உடல், உள ஆற்றல்களில் ஏதாவது குறைபாடு உள்ளமையால் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ வாழ்க்கையின் அத்தியாவசியச் செயல்களை செய்வதை உறுதிப்படுத்த முடியாத குறையே மாற்றுத்திறன் என மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச்சட்டம் வரையறுக்கிறது. 

மாற்றுத்திறனையுடைய நபர்கள் மாற்றுத்திறனற்ற நபர்களை விட அதிக சமூக பொருளாதார தாக்கங்களை கொண்டுள்ளனர். உலக சனத்தொகையில் 15% அல்லது 1 பில்லியன் மக்கள்  மாற்றுத்திறனாளிகளாவர் (World Health Organization and World Bank, 2019).  அதிலும் 80% ஆனோர் வாழ்வது அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலாகும். 

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களில் 20% மாற்றுத்திறனாளிகளாவர். அதிலும் வடமாகாணத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 18,085 பேர் மாற்றுத்திறனிற்கு உள்ளாகியுள்ளனர்.

அந்தவகையில் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,786 மாற்றுத்திறனாளிகளாகவுள்ளனர் அதிலும் 998 பேர் பெண்களாவார்.

 மாற்றுத்திறனை ஏற்படுத்தும் காரணிகளாக இயற்கைக் காரணிகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்படும் காரணிகளும் செல்வாக்கு செலுத்துகின்றன. மாற்றுத்திறனின் தன்மையைப் பொறுத்து கண்பார்வையற்றவர்கள், பேசுவதற்க்கு முடியாதவர்கள், அவயவம் துண்டிக்கப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர், காதுகேளாதோர், மனநிலை பாதிக்கப்பட்டோர் என வகைப்படுத்தப்படுகிறது.

இலங்கையில் நடைபெற்ற நீண்டகால யுத்தத்திற்கு பின்னர் இலங்கையானது சமூக பொருளாதாரநிலைகளில் பல பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ள நாடாகக் காணப்படுகின்றது.

முப்பது வருடங்களாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த யுத்தம் முடிவுற்றதனைத் தொடர்ந்து பெருமளவானோர் மாற்றுத்திறனிற்குட்படுத்தப்பட்டதுடன், பெருமளவான பௌதிக மற்றும் மனிதவளங்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்தமையானது வடபகுதி மக்கள் மீளவும் விருத்தியடைவதில் பலசவால்களை எதிர்கொண்டு வருகிறது. 

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் சமூக, பொருளாதார மற்றும் உளவியல் ரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் பெண் மாற்றுத்திறனாளிகள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கென சமூக சேவைகள் திணைக்களத்தினால் பல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைவிடவும் அரசசார்பற்ற நிறுவனங்கள், புலம்பெயர் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களாலும் சமூக, வாழ்வாதார மற்றும் உளவியல் ரீதியான சேவைகளை வழங்குகின்றன. 

எனினும் கிடைக்கப் பெறும் உதவிச்சேவைகளின் கிடைப்பனவானது மாற்றுத்திறனாளிகளின் அபிவிருத்திக்கும் நல்வாழ்விற்கும் போதுமானதாக இல்லை. எனினும் சமூகசேவைகள் அனைத்து வலுவிழந்த நபர்களுக்கும் கிடைக்கின்றதா?, வாழ்வாதாரம் தொழில்பயிற்சி என்பன வலுவிழந்தோருக்கு ஏற்றவகையில், வலுவிழப்பின் தன்மையைப்பொறுத்து வழங்கப்படுகின்றதா, வாழ்வாதாரம், உதவுதொகைகளின் கொடுப்பனவுத் தொகைகள் போதுமானதா மற்றும் சரியான சமுதாயத்தை அடிப்படையாகக்கொண்ட புனர்வாழ்வு மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதா என்றால் அது கேள்விக்குறியே ஏனெனில் சரியான சமுதாயத்தை அடிப்படையாகக்கொண்ட புனர்வாழ்வு (Community Based Rehabilitation) வழங்கப்பட்டு அதன் மூலம் சரியான அபிவிருத்தி நடைபெற்று இருந்தால் ஏனைய நபர்களைக் காட்டிலும் நலிவுற்ற மாற்றுத்திறனாளிகள் இன்னமும் வறுமையில் இருப்பது ஏன்? அதிலும் பெண்கள் தற்போது அதிகம் வறுமையில் இருப்பது ஏன்?? போன்ற வினாக்களும் காணப்படுவதுடன், 1988ஆம் ஆண்டின் இலங்கையின் பொதுநிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனுள்ள நபர்கள் தொழில் செய்யக்கூடிய ஆற்றலும் திறமையும், தகுதியும் இருக்குமானால் உள்வாங்க வேண்டுமெனவும் மாற்றுத்திறனைக் காரணமாகக்காட்டி அவர்களை நிராகரிக்கக்கூடாது எனக்குறிப்பிட்ட பொழுதிலும் இன்னும் அதற்கான செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும்.

 மேலும், மாற்றுத்திறனாளி நபர்களுக்கான சர்வதேச மற்றும் தேசிய அரசசார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட உதவிகள் அதிகமானவையாகும். அதிலும் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுற்றதனைத் தொடர்ந்து இன்றுவரை பல்வேறு உதவித்திட்டங்களை வழங்கிவருவதுடன் சுயஉதவிக் குழுக்களையும் உருவாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

 மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை அணுகும்வசதிகள் என்பது மிகவும் இன்றியமையாதது ஆகும் ஆனால் இது பொதுக்கட்டிடங்களில் மாத்திரமல்ல ஏனைய எல்லா இடமும் தேவை. இது வரையும் ஒரு வலுவிழந்த நபர் தானாக அணுகக் கூடிய வகையில் முல்லைத்தீவில் கட்டிடங்கள் இல்லை.

 இலங்கையில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் சட்டங்களும், உரிமைகளும், கொள்கைகளும் காணப்படுகின்ற பொழுதிலும் அவற்றின் செயற்றிறனானது குறைவாகவே காணப்படுகின்றது. அந்தவகையில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பாதுகாப்புச்சட்டம்,1996 (இலங்கை அரசாங்கம்), மாற்றுத்திறனாளிகளிற்கான அணுகும்வசதி விதிமுறைகள்(2006) மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பிலான தேசிய கொள்கை(2003) என்பன காணப்படுகின்ற பொழுதும் அவற்றின் செயற்றிறன் என்பது குறைவாகவே காணப்படுகின்றது.

 தொகுத்து நோக்கின் இலங்கையைப் பொறுத்தவரை மாற்றுத்திறனாளிகள் அதிலும் பெண்மாற்றுத்திறனாளிகளும் அதிகம் பாதிப்புக்களை எதிர்கொள்வதால் அவர்களின் சமூக, வாழ்வாதார, உளவியல் மற்றும் அணுகும்வசதிகள் சரியான வகையில் ஏற்படுத்திக்கொடுக்கப்படுவதுடன், சமுதாயத்தை அடிப்படையாகக்கொண்ட புனர்வாழ்வு, உள்வாங்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியோக அணுகுமுறைகள் இரண்டையும் உள்ளடக்கிய இரட்டைவழி அணுகுமுறையினைப் பயன்படுத்துதல் மற்றும் பெண்மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்த சமூக, வாழ்வாதார செயற்றிட்டங்கள் என்பன முன்னெடுக்கப்படுவதுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டங்கள், உரிமைகள் மற்றும் கொள்கைகள் சரியான வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். என்பதே எம் அனைவரினதும் அவாவாகும்.

அமரா,சமாச ஒன்றியம்

முல்லைத்தீவு 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி...

2025-03-20 17:41:32
news-image

சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

2025-03-20 17:41:10
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மைய அரங்கிற்கு...

2025-03-20 17:24:35
news-image

சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படும் ;...

2025-03-20 14:06:08
news-image

பட்டலந்த குறித்து பேசினால் தான் சிங்கள...

2025-03-18 20:17:35
news-image

'நாடாளுமன்றத்தில் ஐக்கியப்படுவதை தவிர இலங்கையின் தமிழ்...

2025-03-18 12:15:30
news-image

அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு...

2025-03-19 14:50:58
news-image

பெண்களை அச்சுறுத்தும் "மாதவிடாய் வறுமை"

2025-03-18 04:17:11
news-image

IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான...

2025-03-17 22:45:03
news-image

பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் சந்திப்புகள்- கலந்தாலோசனைகள்...

2025-03-17 16:13:28
news-image

பெண்கள் மீதான அரசியல் அவதூறுகளும் சவால்களும்

2025-03-17 10:28:59
news-image

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...

2025-03-16 15:31:15