சதீஷ் கிருஷ்ணபிள்ளை
உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனம். உலகெங்கிலும் 111மொழிகளைப் பேசும் 385கோடிக்கு மேலான மக்கள் பயன்படுத்தும் பிரதான சமூக வலைதளத்தைப் பேணும் நிறுவனம்.
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசெஞ்ஜர் முதலான தொலைத்தொடர்பாடல் வசதிகளின் உரிமையாளரான ஜாம்பவான் முகநூல் நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் பெயர் மெற்றா இன்கோர்பரேஷன்(Meta Incorporation) என்று மாற்றப்படுவதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தரும், ஸ்தாபகத் தலைவருமான மார்க் ஸக்கர்பேர்க் கடந்த வியாழக்கிழமை அறிவித்தார். உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அறிவித்தல் இதுவாகும்.
ஏனிந்த மாற்றம்? வியாபார தந்திரமா, தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் உத்தியா, இழந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முனையும் உபாயமா, அடுத்த நிலை நோக்கிய நகர்விற்கான ஆரம்பப் புள்ளியா என்றெல்லாம் பல கேள்விகள்.
கம்பனிகள் பெயரையும், வர்த்தக நாமங்களையும், இலச்சினைகளையும் மாற்றிக் கொள்வதொன்றும் புதியது அல்ல. இதற்கு சமூக அழுத்தங்கள் காரணமாக இருக்கலாம். ஒரு கம்பனியைச் சுற்றி எதிர்மறையான விடயங்கள் குவிகையில், அந்தக் கம்பனி தடாலடியாக பெயரை மாற்றிக் கொள்ளும்.
அமெரிக்காவின் ஜெனரல் மோட்டர்ஸ் கம்பனி உதாரணம். உலக பொருளாதார மந்தநிலையில் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டபோது, இந்தக் கம்பனிக்கு அமெரிக்க அரசாங்கம் பெருந்தொகையைக் கடனாகக் கொடுத்து இக்கட்டான நிலையில் இருந்து மீட்டது.
இதனை பொதுவாக பெயில் அவுட் (Bail Out) என்பார்கள். எனவே, கடன்காரனாக வாடிக்கையாளர்கள் முன்னிலையில் நிற்பது நம்பிக்கையை இழக்கச் செய்யும் செயல் என்பதால், இந்தக் கம்பனியின் வர்த்தக நாமம் எல்லி (Ally) என்று மாற்றப்பட்டது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-31#page-40
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM