நாம் மீண்டும் முடக்கத்திற்கு செல்ல தயாராகின்றோமா ? - விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் !

Published By: Digital Desk 3

01 Nov, 2021 | 04:08 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த ஒரு வாரமாக கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை வீழ்ச்சியில் மந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே தீபாவளி பண்டிகை, திருமண வைபவங்கள் மற்றும் மரண சடங்குகள் உள்ளிட்டவற்றில் பங்குபற்றும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா ? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும் என்றும் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தினார்.

கொழும்பில்  திங்கட்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதும் நாளாந்தம் சுமார் ஐந்நூறை அண்மித்தளவில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு தொற்றாளர்கள் இனங்காணப்படுவதுடன் நாம் இன்னும் அபாய கட்டத்திலேயே இருக்கின்றோம் என்பது தெளிவாகிறது. 

இந்த நிலைமைக்கு மத்தியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் வீதமும் மந்தமடைந்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் அதிகமாகவும் காணப்படுகிறது. அதாவது தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி அவதானிக்கப்படவில்லை. 

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பாடு செய்யப்படுகின்ற திருமண வைபங்கள், மரண சடங்குகள், உற்சவங்கள், மக்கள் ஒன்று கூடுதல் உள்ளிட்ட அனைத்து காரணிகளும் இதில் தாக்கம் செலுத்துவது தெளிவாகிறது.

எனவே நாம் மீண்டும் பழைய முடக்க முறைமைக்கு செல்வதற்கு தயாராகின்றோமா ? அல்லது நாடு என்ற ரீதியில் முன்னோக்கிச் செல்கின்றோமா? என்பதை நாமனைவரும் பொறுப்புடன் செயற்படுவதன் ஊடாகவே தீர்மானிக்க முடியும். 

இவ்வார இறுதி நீண்ட விடுமுறை காலமாகும். இதன் போது அநாவசிய பயணங்களை தடுக்க முடியுமெனில் அதுவே முக்கியத்துவமுடையதாகும்.

தீபாவளி பண்டிகை உள்ளிட்ட சமயம் சார் நிகழ்வுகள் மக்கள் ஒன்று கூடுவதற்கு வாய்ப்பளிப்பவையாகும்.

இதன் போது அத்தியாவசியமானவர்கள் மாத்திரம் இவற்றில் பங்குபற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

இதனுடன் தொடர்புடைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்துகின்றோம்.

அத்தோடு ஏதேனுமொரு வகையில் தொற்று அறிகுறிகள் அல்லது உடல்நலக் குறைவு காணப்படுமாயின் அவ்வாறானவர்கள் இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா செட்டிகுளத்தில் கணவனும் மனைவியும் வெட்டிக்...

2023-11-30 13:46:52
news-image

"கண்டி பெருநகர அபிவிருத்தி” வேலைத்திட்டத்துக்கு 1,500...

2023-11-30 11:50:14
news-image

கிளிநொச்சி பளை பகுதியில் மோட்டார் சைக்கிள்...

2023-11-30 12:59:15
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2023-11-30 12:49:18
news-image

அமுல்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்புக்களில் மாற்றமில்லை இரண்டாம் தவணை...

2023-11-30 12:42:01
news-image

வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை எதிர்வரும்...

2023-11-30 12:31:04
news-image

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த...

2023-11-30 12:23:54
news-image

பெண்ணின் முச்சக்கர வண்டி கொள்ளை ;...

2023-11-30 11:49:48
news-image

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிப் பிரயோக...

2023-11-30 11:48:43
news-image

ராகம வைத்தியசாலையின் புற்றுநோயாளர் சிகிச்சைப் பிரிவுக்கு ...

2023-11-30 11:45:52
news-image

சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகள் பிடித்த...

2023-11-30 12:10:39
news-image

இவ் வருடத்தில் 21 ஆயிரம் மில்லியன் ...

2023-11-30 11:42:48