பொலிஸார்  மக்களிடம் விடுத்துள்ள எச்சரிக்கை ! சமூகத்திற்கு பேராபத்தாகும் எனவும் தெரிவிப்பு   

Published By: Digital Desk 3

01 Nov, 2021 | 03:58 PM
image

(எம்.மனோசித்ரா)

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய செயற்படுமாறு சகல தரப்பினரையும் கேட்டுக் கொள்கின்றோம்.

அவ்வாறில்லை எனில் புதிய கொவிட் அலை ஏற்படுமாயின் முழு சமூகத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. 

குறிப்பாக கலந்துரையாடல்கள் , மாநாடுகள் என்பவற்றை முடிந்த வரையில் இணையவழியூடாக ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மண்டபங்களில் ஏதேனும் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டால் , குறித்த மண்டபத்தின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கினரை மாத்திரம் உள்ளடக்கி அவற்றை நடத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போது திருமண வைபவங்களை நடத்தும் போது அதிகபட்சமாக 100 பேருக்கே அழைப்பு விடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணங்கள் மண்டபங்களில் நடத்தப்பட்டால் அங்கும் மூன்றில் ஒரு பங்கினர் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும். திறந்தவெளிகளில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டால் 150 பேருக்கு அனுமதி வழங்க முடியும். 

புதிய வழிகாட்டல்களுக்கமைய அவசியமான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று திரையரங்குகள் , விளையாட்டு நிகழ்வுகள் , மரண சடங்குகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கான வழிகாட்டல்களும் வெளியிடப்பட்டுள்ளன. 

எனவே அதற்கு ஏற்ப செயற்படுமாறு சகலரையும் கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால் புதிய கொவிட் அலை ஏற்படுமாயின் முழு சமூகத்திற்கும் அது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச அச்சகத் திணைக்களத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 13:58:06
news-image

ரிதியாகம பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர்சூட்டப்பட்டது

2025-02-13 13:29:21
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-13 12:54:39
news-image

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர்...

2025-02-13 13:46:35
news-image

நாடு கடத்தப்பட்டார் இந்தியாவில் தலைமறைவாகியிருந்த சுமித்...

2025-02-13 13:43:14
news-image

ஒருவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதன் அர்த்தத்தை...

2025-02-13 12:54:27
news-image

யாழில் 13 வயதான மகளை அடித்து...

2025-02-13 12:40:57
news-image

பாணந்துறை கடலில் மூழ்கிய 11 சிறுவர்கள்...

2025-02-13 12:54:13
news-image

காதலர் தினம் என்ற போர்வையில் இடம்பெறும்...

2025-02-13 12:02:24
news-image

உலர்ந்த கருவாடு, இஞ்சியுடன் சந்தேநபர்கள் மூவர்...

2025-02-13 12:52:28
news-image

பொருளாதார, முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்த ஐக்கிய...

2025-02-13 11:52:27
news-image

“இதுதான் நீங்கள் வழங்கும் நீதியா? தேசிய...

2025-02-13 11:04:31