நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் ஐவர் பலி - பொலிஸ் பேச்சாளர்

Published By: Digital Desk 9

01 Nov, 2021 | 02:56 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற விபத்துக்களில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் 12 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். 

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்துக்களில் மாத்திரம் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. 

இதற்கான காரணம் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை மற்றும் கவனயீனமாக வாகனங்களை செலுத்துவதாகும்.

ஞாயிறன்று இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்த ஐவரில் மூவர் பாதசாரிகளாவர். எனவே வீதிகளில் நடந்து செல்பவர்கள் உள்ளிட்ட சகல நபர்கள் தொடர்பிலும் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்துகின்றோம்.

மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்களும், வீதிகளில் செல்பவர்கள் உள்ளிட்ட வேறு நபர்களும் அதிகளவில் உயிரிழக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளானால் படுகாயமடையக் கூடிய மற்றும் உயிரிழக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷிரந்தி ராஜபக்‌ஷ  நாட்டை விட்டு தப்பிச்...

2026-09-16 17:44:55
news-image

புகையிரத பொது முகாமையாளரை பதவி விலகக்...

2026-09-16 23:26:17
news-image

புதிய சீனத் தூதுவர் வீ ஹுவாஷியாங்...

2026-09-16 22:09:21
news-image

ராஜபக்‌ஷ குடும்பத்தை இம்ரான் கான் அல்லது...

2026-09-16 16:49:17
news-image

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு நெருக்கடி: மருந்து...

2026-09-16 16:22:25
news-image

இலங்கையை பிராந்திய நிதித் தொழில்நுட்ப மையமாக...

2026-09-16 16:46:15
news-image

மட்டக்குளி பகுதியில் கோர விபத்து –...

2026-09-16 22:07:10
news-image

மாணவர் குறைவான கிராமப்புற பாடசாலைகளை மூட...

2026-09-16 16:48:05
news-image

“சிரிலிய சவிய” நிதி மோசடி வழக்கு...

2026-09-16 19:27:20
news-image

தமிழ் பேசும் சமூகங்கள் நாட்டின் அரசியலை...

2026-09-16 20:29:10
news-image

நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கல்: செயற்கை...

2026-09-16 14:02:12
news-image

மன்னார் வைத்தியசாலையில் இந்திய நிதியுதவியுடன் அவசர...

2026-09-16 19:10:32