டோக்கியோவில் பயணிகள் ரயிலொன்றில் ஞாயிற்றுக்கிழமை மாலை நபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் காயமடைந்துள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேநேரம் கொலை முயற்சியில் ஈடுபட்ட 24 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பேட்மேன் திரைபடத்தில் ஜோக்கரின் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் ஆடையை அணிந்திருந்தார் என்று சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலினால் 70 வயதுடைய பயணியொருவர் மார்பில் குத்தப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ளார்.
தாக்குதல் நடந்தபோது, ரயிலுக்குள் இருந்து பயணிகள் ஓடும் காட்சிகள் கையடக்கத் தொலைபேசிகளில் பதிவுசெய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் தாக்குதல் நடத்தியவரிடம் இருந்து தப்பிக்க பயணிகள் ரயில் பெட்டிகளில் ஓடுவதையும், ஜன்னல் வழியாக குதிப்பதையும் வெளிக்காட்டுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM