ஞானசார தேரரின்நியமனத்தால் ஆளும் தரப்பிற்குள் அதிருப்தி : சட்டத்துறைசார்ந்தவர்கள் விசனம் : இந்தியாவும் கரிசனை

Published By: Digital Desk 2

01 Nov, 2021 | 11:42 AM
image

ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தல்வாக்குறுதியான ‘ஒரே நாடு ஒரேசட்டம்’ என்ற எண்ணக்கருவை செயற்படுத்துவதற்கானசட்ட வரைவு ஒன்றை உருவாக்குவதற்கும், இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகளை, ஆராய்ந்துபொருத்தமான திருத்தங்களை முன்வைப்பதற்குமாக அரசியலமைப்பின் 33ஆவது  உறுப்புரையின்பிரகாரம் தனக்குள்ள அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி செயலணியொன்றைஸ்தாபித்துள்ளார். 

இந்தச்செயலணியானது பொதுபல சேனாவின் பொதுச்செயலர்ஞானசார தேரர் தலைமையில் 13 உறுப்பினர்களைக்கொண்டதாக உள்ளது. தற்போது வரையில்வடக்கு கிழக்கையோ அல்லது மலையகத்தினையோ சேர்ந்தஎந்தவொரு தமிழினத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் உள்வாங்கப்படவில்லை.

பலத்த விமர்சனங்களும், எதிர்பலைகளும்எழுந்த நிலையில் தற்போது வடக்கு,கிழக்கு,மலையகத்தினைச் சேர்ந்த மூன்று தமிழ்ப்பிரதிநிதிகள் உள்வாங்கப்படுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமரின்இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்திருக்கின்றார். 

கிழக்குமாகாண தொல்பொருள் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி பாதுகாப்புச் செயலாளர்ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில்நியமிக்கப்பட்டபோதும் தமிழ் தரப்பில் எவரும்உள்ளீர்க்கப்பட்டிருக்கவில்லை.பின்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்தவிடயத்தினை கையில் எடுத்திருந்தார். 

தமிழ் பிரதிநிதிகளை உள்வாங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் ஈற்றில் தமிழ் தரப்பில்யாரும் முன்வரவில்லை என்று ‘பந்து’ தமிழர்கள்பக்கமே திருப்பி விடப்பட்டது. ஆகவே ஞானசார தேரரின்செயலணிக்குள் தமிழர்கள் உள்வாங்கப்படுவதற்கு அவர் அனுமதிப்பாரா என்பதுமுதலாவது கேள்வி? அவ்வாறு அனுமதித்தாலும்‘தாளம்’ போடுவதற்கு தயாராக தமிழர் தரப்பிலிருந்துயார் செல்லப்போகின்றார்கள் என்பது இரண்டாவது கேள்வி?

இவ்வாறிருக்கையில்,ஜனாதிபதியின் மேற்படி செயலணியானது அமைச்சரவையில்உள்ளவர்களுக்கே தெரியாத நிலையில் தால்நியமிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஆளும் தரப்பிலும் யாருக்கும்தெரியாது. ஒட்டுமொத்த அரசாங்கத்திற்குமே இது ‘பிரேக்கின் நியூஸ்’ஆகத்தான் இருந்தது. 

இதனால்,அமைச்சரவையிலும், ஆளும் தரப்பினுள்ளும் இருக்கும்சட்டத்துறை வாண்மைத்துவம் பெற்றவர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். அத்துடன் ஜனாதிபதியின் இந்த செயலணிச் நியமனச்செயற்பாட்டை திரைமறைவிலும் தமக்கு நெருங்கியவர்களிடத்திலும் மிகக் கடுமையாகவிமர்சித்தும் உள்ளனர். 

குறிப்பாக,சட்டத்துறை சார்ந்தவர்கள், ஏற்கனவே அரசியலமைப்பு உருவாக்கம்,இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் பங்குபற்றியவர்கள் இவ்விதமான விமர்சனங்களை வைப்பதில் முக்கியமானவர்களாக உள்னர். அதுமட்டுமன்றி சிலமுக்கியஸ்தர்கள் ‘ஞனாசார தேரர் சட்டவரைபைச் செய்வதென்றால் நாம் ஏன் அரசியலில்இருக்க வேண்டும்’ என்ற மனோநிலையைக் கூடஅடைந்து விட்டார்கள். 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-31#page-37

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச சமூகத்திடமிருந்து ஆதரவை பெறுதல்

2024-12-11 11:18:31
news-image

இனவாதத்தை ஒழிப்பது குறித்த அரசாங்கத்தின் கருத்துக்களும்...

2024-12-11 11:05:09
news-image

இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து -...

2024-12-10 12:27:56
news-image

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு குறுக்கே நிற்கும்...

2024-12-10 09:04:49
news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32
news-image

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : சிறுபான்மையினருக்கு...

2024-12-08 15:49:06
news-image

மிரட்டப்படும் எதிர்க்கட்சிகள்

2024-12-07 11:12:36