பிரேசிலிய வங்கிக் கொள்ளையர்களின் கும்பலைச் சேர்ந்த 25 உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் ஒரு விசேட பொலிஸ் நடவடிக்கையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு AFP செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலியான அனைவரும் திட்டமிட்ட குற்றவியல் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் உள்ள வர்கினா நகரில் இந்த குழு மற்றொரு வங்கியை கொள்ளையடிக்கத் திட்டமிடுவதை அறிந்ததும் பொலிஸார் இந்த நடவடிக்கையைத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இராணுவ காவல்துறையுடன் இணைந்து 50 அதிகாரிகளின் இந்த நடவடிக்கை வர்கினா நகருக்கு அருகில் முன்னெடுத்துள்ளனர்.

இந்த கொள்ளை கும்பலிடமிருந்து அதிக திறன் கொண்ட துப்பாக்கிகள், வெடிபொருட்கள், குண்டு துளைக்காத உள்ளாடைகள், திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் இதர ஆயுதங்கள் பெருமளவில் கையிருப்பில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Image

Image

அதேநேரம் அவற்றை காவல்துறை அதிகாரிகள் கைப்பற்றியும் உள்ளனர்.