எம்.எஸ்.தீன்
இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதனை செயற்படுவதற்கான சட்டவரைபு ஒன்றினைஉருவாக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 13 பேர் கொண்ட செயலணி ஒன்றினை நியமித்துள்ளார்.
இச்செயலணிக்கு பொதுபல சேனவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை தலைவராகவும்நியமித்துள்ளார். இச்செயலணிக்கு ஞானசார தேரரை தலைவராக நியமித்துள்ளமைக்கும், ஒரே நாடுஒரே சட்டம் என்ற நிலைப்பாட்டிற்கும் எதிராக கடும்விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்துவதற்கும் சட்டத்தின் பாதுகாப்பு நியாயமானதாகஇருக்க வேண்டும் என்பதற்காகவும் நியமிக்கப்பட்ட செயலணிக்கு ஞானசார தேரரை நியமித்திருப்பதுநாட்டின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பை அவமதிக்கும் செயலாகும் என்று ஐக்கிய மக்கள்சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளமை கவனத்திற்குரியதாகும்.
மேலும், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனைப்பெற்றவர். இவர் ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நாடு பௌத்தசிங்கள மக்களுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். ஏனையவர்கள் இங்கு வாழ வந்தவர்கள். அவர்களுக்குஇந்த நாட்டின் மீது எந்தவொரு உரிமையும் கிடையாதென்ற கொள்கையைக் கொண்டவர்.
இத்தகைய முகங்களைக் கொண்டவரை தலைவராகக் கொண்டு இந்த நாட்டில் எல்லோருக்கும்பொதுவான சட்டம் இருக்க வேண்டும். தனியார் சட்டங்கள் இருக்க முடியாதென்பதனை நிலைநாட்டுவதற்காகஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டுக்கு நியாயமான வகையில் எல்லா இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வரைபு முன் வைக்கப்படுமென்று எதிர்பார்க்க முடியாது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-31#page-34
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM