கபில்
“அரசியல் ரீதியாக ஒட்டுறவுகளை வைத்துக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தாலும் தற்போதைய அரசாங்கத்தை உருவாக்குவதில் ஞானசார தேரருக்கும் அவரது அமைப்புக்கும் அதிக பங்கு இருந்தமை தெளிவாகும். இந்நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் தலைவராக ஞானசார தேரரை நியமித்திருப்பதன் , மூலம் அவர்கள் பொது இலக்கில் இணைந்து செயற்பட்டிருக்கிறார்கள் என்பதையே உறுதி செய்ய முடிகிறது”
“தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சிறப்பு அதிகாரங்கள் கொடுக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் ஞானசார தேரர் ஒரு நாடு ஒரே சட்டம் என்பதை வலியுறுத்துகிறாரே தவிர, தமிழர்களுக்குசமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அல்ல”
இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயற்படுத்துவதற்கான சட்ட வரைவு ஒன்றை உருவாக்குவதற்கும்,இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளசட்ட வரைவுகளை, ஆராய்ந்து பொருத்தமான திருத்தங்களை முன்வைப்பதற்குமான ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்தச் செயலணி பலத்த சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. பொதுபல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர் இதன் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது முதலாவது சர்ச்சை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழக்கம் போலவே, தமிழர்களை உள்வாங்காமல் தவிர்த்துக் கொண்டிருப்பது இரண்டாவது சர்ச்சை.
ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை நடைமுறைப்படுத்துவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலின் போது, சிங்கள மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
பதவிக்கு வந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக அவர் ஞானசார தேரர் தலைமையில் செயலணியை உருவாக்கியிருக்கிறார்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-31#page-33
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM