ஸ்டாலினின்  ''சமூகநீதி''

By Digital Desk 2

31 Oct, 2021 | 06:17 PM
image

குடந்தையான்

அண்மையில்நிறைவடைந்த ஒன்பது மாவட்ட ஊரகஉள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க. வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறது. 

கடந்தகாலஅ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றஉள்ளாட்சித் தேர்தலில் 60சதவீத இடங்களில் வெற்றிபெற்ற தி.மு.க.,தற்போது அதைவிட கூடுதலாக வெற்றிபெற்றுள்ளது.

இதன்மூலம்மக்கள் தி.மு.க.விற்கு தொடர்ந்து தங்களின்ஆதரவை அளித்து வருகிறார்கள் என்பதுஊர்ஜிதமாகிறது. இதன் பின்னணி குறித்துஅவதானிக்க வேண்டியுள்ளது.

  மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவும், மக்கள் விரும்பும் திட்டங்களைஅறிமுகப்படுத்தி, அதனை விரைவாக அவர்களிடத்தில்சென்றடையச் செய்வதிலும் தி.மு.க.தலைமையிலான அரச இயந்திரத்தின் செயற்றிறன்,வாக்காளர்களுக்கு திருப்தியும், இன்ப அதிர்ச்சி தரும்வகையிலும் செயல்படுவதால், மக்கள் தி.மு.க.விற்கு எதிர்பார்ப்பைவிட கூடுதலான ஆதரவை வழங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆனால் தேர்தல் ஜனநாயகத்தை பொறுத்தவரைதமிழகத்தில் தி.மு.க.விற்கு எதிரான மனநிலைகொண்டவர்கள் அதிகம் என்றும், அவர்களைஅ.தி.மு.க. முழுமையான அளவில்ஒருங்கிணைத்து செயல்படவில்லை என்றும், அ.தி.மு.க. கூட்டணியை தொடர்ந்துபலவீனப்படுத்தி வருவதால் தான் தி.மு.க.வின் வெற்றிசாத்தியமாகிறது என்ற நிலைமையும் உள்ளது.

ஸ்டாலின்தலைமையிலான தி.மு.க.அரசினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட சமூகநீதி கண்காணிப்பு குழுவுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்புகாணப்படுகின்றது.

  திராவிடம் என்பது தி.மு.க. முன்வைத்த முதற்குரல்.அந்த திராவிடத்தில் சமூக நீதி, பெண்விடுதலை, சமத்துவம், மதசார்பின்மை, மொழி உணர்வு, இனஎழுச்சி, தமிழக வளர்ச்சி எனபல்வேறு கூறுகள் அடங்கியிருக்கின்றன. 

அதனடிப்படையில்,முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.அரசு அறிவித்திருக்கும் சமூகநீதி கண்காணிப்புக்குழு, தமிழ் சமூக மற்றும்தமிழக மேம்பாட்டிற்கு இன்றியமையாத ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்பதை நிரூபித்துக் காட்டியதி.மு.க., பெண்களுக்கு33 சதவீத இட ஒதுக்கீடு, இருமொழிக்கொள்கை எனப் பல விடயங்களில்தி.மு.க. அரசாணைமூலமும், அதனை செயல்படுத்துவதிலும் தன்கொள்கையை நிரூபித்திருக்கிறது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க

https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-10-31#page-31

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க 

https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right