மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டதை அடுத்து, மாகாணங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 தடுப்பு ஜனாதிபதி செயலணியில் நடைபெற்ற முந்தைய சந்திப்பின் போது, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 31 ஆம் திகதி (இன்று) முதல் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான ரயில்சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, அலுவலக ரயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன.
கண்டி பெலியத்த - மாத்தறை - காலி - மாஹோ - குருநாகல் - இறம்புக்கணை - புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து இந்த ரயில்கள் சேவையில் ஈடுபடவிருக்கின்றன.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM