பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான தெமட்டகொட ருவன் கைது ! பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் கைப்பற்றல்

31 Oct, 2021 | 07:11 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் பல சந்தர்ப்பங்களில் ஹெரோயின் , ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய தெமட்டகொட ருவன் எனப்படும் சிறிநாயக்க பத்திரணலாகே ருவன் சமில பிரசன்ன என்ற சந்தேகநபர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சட்ட விரோத சொத்துக்கள் அல்லது உடைமைகள் தொடர்பான பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு , அவரிடமிருந்து பல இலட்சக்கணக்கான பெறுமதியுடைய வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

Police seize four luxury vehicles & gold belonging to Dematagoda Ruwan -  NewsWire

கடந்த காலங்களில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியிருந்தமைக்கமைய சில நபரகள் வெவ்வேறு வழிகளில் பணத்தை சேமித்துள்ளமை தொடர்பில் தெரியவந்தது. புலனாய்வு பிரிவினரால் இது தொடர்பில் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டது. 

அதற்கமைய இது தொடர்பில் விசேட பொலிஸ் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கமைய குற்ற விசாரணைப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகத்தின் கீழ் சட்ட விரோத சொத்துக்கள் அல்லது உடைமைகள் தொடர்பான புதிய விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது.

அதற்கமைய கடந்த மார்ச் மாதம் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த நபரொருவர் தொடர்பில் மேற்கூறப்பட்ட விசாரணைப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition Dematagoda  Ruwan arrested by CID

அதற்கமைய அவரிடம் காணப்பட்ட சொத்துக்கள் சட்டவிரோதமான சேர்க்கப்பட்டவை என்று உறுதிப்படுத்தப்பட்டது. 

கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி இந்தியாவில் இந்திய கடற்படையினரால் இலங்கையின் படகொன்றில் 300 கிலோ கிராம் ஹெரோயினுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த படகில் காணப்பட்ட செய்மதி தொலைபேசி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய இலங்கையிலுள்ள நபரொருவருக்கு குறித்த ஹெரோயின் தொகையுடன் தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த ருவன் என்ற நபர் தொடர்பு பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 

குறித்த சந்தேகநபர் இதுபோன்ற மேலும் பல வர்த்தக நடவடிக்கைகளுடனும் , குறிப்பாக போதைப்பொருள் வியாபாரத்துடனும் , கொலை சம்பவங்களுடனும் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.

சிறிநாயக்க பத்திரணலாகே ருவன் சமில பிரசன்ன என்ற தெமட்டகொட ருவன் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை  சட்ட விரோத சொத்துக்கள் அல்லது உடைமைகள் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்படுவதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய அவர் 2017 இல் 280 கிலோ கிராம் ஹெரோயின் , அதே வருடத்தில் 40 கிலோ கிராம் ஹெரோயின் , 2018 இல் 200 கிலோ கிராம் ஹெரோயின் , 200 கிலோ கிராம் ஐஸ் , 2019 இல் 200 கிலோ கிராம் ஹெரோயின் , 100 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருட்களை இலங்கைக்கு கடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition Dematagoda  Ruwan arrested by CID

இவ்வாண்டின் 21 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் இவரால் இலங்கைக்கு கடத்தப்பட்டுள்ளது. இதே ஆண்டில் இந்தியாவிலிருந்து 340 கிலோ கிராம் ஹெரோயினை இலங்ககைக்கு கடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. 

இவ்வாறான போதைப்பொருள் கடத்தல் மூலம் குறித்த சந்தேகநபரால் 700 இலட்சம் ரூபா பெறுமதியுடைய வாகனம் , 300 இலட்சம் பெறுமதியுடைய ஜீப் வாகனம், 330 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய பி.எம்.டபிள்யு கார், 480 இலட்சம் பெறுமதியுடைய பி.எம்.டபிள்யு ஐ.8 ரக கார் என்பன குறித்த பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த சந்தேகநபரின் வீட்டிலிருந்து 1 கிலோ 590 கிராம் தங்கம் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவரிடம் மேலும் வீடு , காணிகள் , வாகனங்கள் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது. அவை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமூகத்திலுள்ள இவ்வாறான நபர்கள் தொடர்பில் சட்ட விரோத சொத்துக்கள் அல்லது உடைமைகள் தொடர்பான பொலிஸ் பிரிவினரால் பண சுத்தீகரிப்பு சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22