(எம்.எம்.சில்வெஸ்டர்)
நாட்டின் மின்சார துறையை நிர்வகிப்பது அரசாங்கம் அல்ல. அமெரிக்காவுக்கு பங்குகளை விற்பனை செய்ததன் காரணமாக அமெரிக்காவே நிர்வகிக்கிறது.
அதனாலேயே வெள்ளியன்று வெளியான அதி விசேட வர்த்தமானியில் மின்சார துறையை அத்தியாவசிய சேவையாக உள்ளடக்கவில்லை என இலங்கை மின்சார சபையின் ஒண்றிணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் வீரகேசரிக்குத் தெரிவித்தார்.
துறைமுகம், எரிபொருள், அரச வங்கி, தபால் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வெள்ளியன்று இரவு வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. இந்த வர்த்தமானி அறிவித்தலில் மின்சார துறை இணைக்கப்பட்டிருக்கவில்லை.
இவ்விடயம் குறித்து இலங்கை மின்சார சபையின் ஒண்றிணைந்த தொழிற் சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலாலிடம் கேட்டபோது,
" வெள்ளியன்று வெளியான அதி விசேட வர்த்தமானியில் முக்கியம் வாய்ந்த துறையான மின்சார துறையை அத்திவசிய சேவையாக உள்ளடக்கப்படாமை வினோதமான விடயமல்ல.
ஏனெனில், மின்வார துறையை தற்போது நிர்வகிப்பது அரசாங்கம் அல்ல. அமெரிக்காவேயாகும். அரசாங்கம் நிர்வகித்தால்தானே, வர்த்தமானியில் சேர்த்துக்கொள்ள முடியும்" பதிலளித்தார்.
எதிர்வரும் 3 ஆம் திகதியன்ற வேலை நிறுத்தப் போராட்டதில் ஈடுபடுவது உறுதியாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
" கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்த உடன்படிக்கையை இரத்தசெய்யக் கோரி மனுவொன்றை ஜனாதிபதிக்கு கையளிக்கவுள்ளோம்.
இதனை முன்னிட்டு இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அனைவரையும் கொழும்புக்கு கொண்டு வந்து மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.
அதைத் தொடர்ந்து எதிர்வரும் 3 ஆம திகதிக்கு பின்னர் நாம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது உறுதி. நாட்டின் சகல நடவடிக்கைகளுக்கும் மின்சாரம் அத்தியவசியமாகும். கொவிட் -19 தடுப்பூசிகளை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைப்பதற்கும் மின்சாரம் தேவை.
எவ்வாறாயினும் நாம் மின்சார விநியோகத்தை தடை செய்ய மாட்டோம். ஏனெனில் அது சட்ட விரோத செயலாகும். எனினும், சகல மின்சார விநியோகத்துகுரிய நடவடிக்கைகளையும் செய்துவிட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM