(இராஜதுரை ஹஷான்)
1979 ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்திற்கு அமைய துறைமுகம், பெற்றோலியம், தபால் சேவைகள் மற்றும் அரச வங்கி, போக்குவரத்து சேவைகள், புகையிரதம் மற்றும் சுகாதார சேவைகள் ஆகிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
வெளியாகியுள்ள விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 1979.61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுமக்கள்சேவை சட்டத்தின் 2 ஆம் அத்தியாயத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கமைய, சேவை வழங்குதலை தீர்மானிக்கும் சகல அரச கூட்டுத்தாபனங்கள் அல்லது அரச திணைக்களங்கள், அல்லது உள்ளுராட்சிமன்றங்கள் அல்லது கூட்டுறவு மையங்கள்,ஆகிவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படும் சேவைகள் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்காக அத்தியாவசியமானது என்பதை கருத்திற் கொண்டு அச் சேவைகளை வழங்குவதில் நெருக்கடிகள் அல்லது தடைகள் தோற்றம் பெறுவதற்கு வாய்ப்பு காணப்படும் காரணத்தினால், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட கொவிட்-19 நோய் தடுப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு சகல அரச கூட்டுத்தாபனங்கள் அல்லது அரச திணைக்களங்கள்,உள்ளுராட்சி மன்ற சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்படுகிறது.
1979 இலக்கம 51 இலங்கை துறைமுக அதிகார சபை சட்டத்தின்3வது அத்தியாயத்திற்கமைய நிறுவப்பட்ட இலங்கை துறைமுக அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் சேவைகள் மற்றும் அததியாவசிய சேவைகள் தொடர்ந்து முன்னெடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெற்றோலிய உற்பத்திகள் அல்லது திரவ வாயு உள்ளிட்ட அனைத்து எரிபொருள் சேவை விநியோகம்,சுங்கம் மற்றும் துறைமுக சேவைகள்,பொருட்கள் போக்குவரத்திற்காக இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் பயணிகள் போக்குவரத்து சேவைக்காக இலங்கை போக்குவரத்து சபையினால் முன்னெடுக்கப்படும் சேவைகள் பொதுபோக்குவரத்து சேவையை பாதுகாப்பான முறையில் முன்னெடுப்பதற்கான பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அனைத்து மாவட்ட செயலாளர் காரியாலயம், பிரதேச செயலாளர் காரியாலயம்,கிராம சேவகர் பிரிவு,சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள், விவசாயம் ஆகிய தரப்பின் சேவைகள்,இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள்,உள்ளுராட்சி மன்ற சேவைகள், அத்துடன் சதொச,கூட்டுறவு,உணவு ஆணையாளர் திணைக்களம்,கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம்,உள்ளிட்ட அடிப்படை சேவைகள்,சுகாதார சேவையுடன் தொடர்பான சேவைகள்,மற்றும் தபால் சேவைகள்,அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.
பஸ் சேவை
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து மாகாண பஸ் போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுளளது. பஸ்ஸில் பயணிகள் ஆசன எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணம் செய்ய முடியும்.வழமைக்கு மாறாக அதிக பஸ்கள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும்.
பஸ்ஸிற்குள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை உறுதிப்படுத்தும் பொறுப்பு பஸ் சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு காணப்படுகிறது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு முரணாக போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் பஸ்கள் தொடர்பில் ஆராய பாதுகாப்பு தரப்பினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுவார்கள் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM