இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் நேரில் சந்தித்து கலந்துரையாடிய வேளையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

குறித்த சந்திப்பின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாட்டு மீனவர்களின் பிரச்சினையை பொறுத்தவரையில்  இரண்டு தரப்பிலும் மனிதாபிமான முறையில் பார்க்க வேண்டும் என தெரிவித்தார். 

அப்போது சட்டவிரோதமாக இலங்கையின் கடல் பகுதிக்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக இலங்கையின் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், வடக்கு பகுதி வாழ் மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.  இந்த பிரச்சனையை தீர்க்க இந்திய அரசின் உதவியை நாடுவதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.